நீங்கள்'அலைகஸ்ஸலாம்'என்று சொல்லாதீர்கள். ஏனெனில் 'அலைக்கஸ்ஸலாம்'என்பது இறந்து போனவருக்குச் சொல்லும்…

நீங்கள்'அலைகஸ்ஸலாம்'என்று சொல்லாதீர்கள். ஏனெனில் 'அலைக்கஸ்ஸலாம்'என்பது இறந்து போனவருக்குச் சொல்லும் வாழ்த்தாகும்

"நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் சென்ற போது அவருக்கு அலைக்கஸ் ஸலாம் என்று சொன்னேன்.அதற்கு ரஸூலுல்லாஹ் அவர்கள் அலைக்கஸ் ஸலாம் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில்அலைகஸ் ஸலாம்'என்பது இறந்து போனவருக்குச் சொல்லும் வாழ்த்தாகும்.என்று கூறினார்கள்"என அபூஜுரைய் அல்ஹுஜைமீ (ரழி) அவர்கள் அறிவிககின்றார்கள்"

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸின் விளக்கம் பின்வருமாறு:ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்விள் தூதரே عليكالسلام என்றார்.அதற்கு இவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டாம் என அந்த மனிதரை ரஸூல் (ஸல்) தடை செய்தார்கள்.மேலும் நபியவர் அந்த ஸலாத்தை விரும்பவில்லை,என்றபடியால் அன்னார் அந்த மனிதருக்குப் பதில் ஸலாம் சொல்லவில்லை.மாறாக இது இறந்து போனவர்களுக்குத் தெரிவிக்கும் வாழ்த்து என்றார்கள்.பின்னர் பிரிதொரு ஹதீஸில் தெரிவிக்கப் பட்டுள்ளது போன்று السلام عليك என்று ஸலாம் சொல்ல வேண்டும் என ஸலாம் கூறும் முறையை அவருக்குக்கு விளங்கப்படுத்தினார்கள்.மேலும் عليك السلام என்றால் இறந்து போனவர்களுக்குத் தெரிவிக்கும் வாழ்த்து என்று நபியவர்கள் சொன்னார்கள் என்றால் அதன் பொருள் மையவாடிகளைத் தரிசிக்கும் போது கூறும் வாழ்த்து அதுவென்பதல்ல. ஏனெனில்ரஸூல்(ஸல்) அவர்கள் மையவாடிகளைத் தரிசிக்குமிடத்து " السلام عليكم أهل دار قوم مؤمنين விசுவாசம் கொண்ட கூட்டத்தவரின் இல்லத்தில் இருப்பவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக என்று கூறுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும் இறந்து போனவர்களுக்கு عليك السلام என்று சொல்லும் பழக்கம் ஜாஹிலிய்யக் காலத்து மக்களிடம் இருந்தது.என்பதை உணர்த்தவதற்காகவே நபியவர்கள் அப்படிச் சொன்னார்கள்.

التصنيفات

ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்