நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகள் இருக்கின்றன.மேலும் நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கு…

நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகள் இருக்கின்றன.மேலும் நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும்,உங்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும் இருக்கின்றன.எனவே அனைவரின் உரிமைகளையும் அவரவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்

அபூ ஜுஹைபா வஹ்ப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஸல்மான் மற்றும் அபூ தர்தா ஆகிய இருவருக்குமிடையில் ரஸூல் (ஸல்) அவர்கள் சகோதரத்துவ உரவொன்றை ஏற்படுத்தி வைத்தார்கள்.எனவே ஸல்மான்,அபூ தர்தாவைத் தரிசிக்கச் சென்ற சமயம் உம்முதர்தா அவர்கள் கசங்கிய ஆடை ஒன்றை அணிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.எனவே அவர்,அவரிடம்"இது வென்ன உங்களின் கோலம்?' என்றா்கள்.அதற்கு அவர்"உங்களின் சகோதரன் அபூ தர்தாவுக்கு உலக விடயத்தில் எந்தத் தேவையும் இல்லையே"என்றார்கள்.அப்பொழுது அபூ தர்தா வந்து விட்டார்.அவ்வமயம் அவர்அ,வருக்காக உணவு தயார் செய்து"நானோ நோன்பாளி ஆகையால் நீங்கள் உண்ணுங்கள்"என்றார் அதற்கு அவர் நீங்கள் உண்ணும் வரையில் நான் உண்ணமாட்டேன்"என்றார்.எனவே அவர் சாப்பிடலானார்.இரவு நேரம் ஆனதுவும் தொழுவதற்காக அபூ தர்தா எழுந்தார்.அப்பொழுது அவரிடம் ஸல்மான் நீங்கள் நித்திரை செய்யுங்கள் என்றார்.எனவே அவர் நித்திரை கொள்ளலானார்.பின்னர் தொழுவதற்காக அவர் எழுந்தார்.எனவே அவரிடம் நீங்கள் உரங்குங்கள் என்று ஸல்மான் கூறினார்.பின்னர் இரவின் இறுதிப் பகுதி ஆகியதும் இப்பொழுது எழுந்திருங்கள் என்றார் ஸல்மான்.அதன் பின்னர் இருவரும் தொழுதனர்.அதனையடுத்து அவரிடம் ஸல்மான்"நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகள் இருக்கின்றன.மேலும் நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும்,உங்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும் இருக்கின்றன.எனவே அனைவரின் உரிமைகளையும் அவரவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்" என்றார்கள்.பின்னர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்த அபூ தர்தா அன்னாரிடம் இதைப் பற்றிக் கூறினார்கள்.அதற்கு நபியவர்கள் "ஸல்மான் சொன்னது உண்மை" என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ரஸூல் (ஸல்) அவர்கள் ஸல்மான் மற்றும் அபூதர்தாஆகியோருக்கிடையில் சகோதர ஒப்பந்தம் ஒன்றை செய்து வைத்தார்கள்.அதன் பின்னர் ஸல்மான் அவர்கள் அபூ தர்தா அவர்களைச் தரிசிக்கச் சென்றார்,அவ்வமயம் அவரின் மணைவி மணமகள் ஆடையிலல்லாமல் அலங்கோலமான உடையணிந்திருக்க அவர் கண்டார்.எனவே அது பற்றி அவரிடம் அவர் கேட்டார்.அதற்கு அவர் தங்களின் சகோதரன் அபூ தர்தாவுக்கு உலகம்,குடும்பம்,ஊண் என்று எந்தத் தேவையுமில்லை.எனவே இதையெல்லாம் அவர் புறக்கணித்து வாழ்கின்றார்.என்றார்.பின்ன அபூ தர்தா வந்த போது அவர் ஸல்மானுக்கு உணவு சமைத்து அதனை அவருக்குப் பரிமாறினார்.அவ்வமயம் அபூ தர்தா நோன்பு வைத்திருந்த படியால் அவர் நோன்பை விட்டு விடும்படி அவருக்கு ஸல்மான் உத்தரவிட்டார்.ஏனெனில் அவர் எப்பொழுதும் நோன்பு பிடித்து வருபவர் என்பதை அவர் அறிந்து வைத்திருந்த படியால் அவர் அவ்வாறு கட்டளையிட்டார்.எனவே அபூ தர்தாசாப்பிடலானார்.அதன் பின்னர் இரவு வணக்கத்தில் ஈடுபட ஆயத்தமானார் அபூ தர்தா.அவ்வமயம் இரவின் கடைசி பகுதி வரையில் அவரைத் தூங்குமாறு அவருக்கு ஸல்மான் உத்தரவிட்டார்.பின்னர் இருவரும் இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழுதனர்.பின்னர் நோன்பு நோற்றல்,இரவில் நின்று வணங்குதல் ஆகிய கருமங்களில் ஈடுபடுவதன் மூலம் மனிதன் தன்னை வீனாக அலட்டிக் கொள்ளக் கூடாது.என்றும், அவனின் தொழுகையானது நன்மையை ஈட்டித் தரக் கூடியதாகவும்,சிரமங்கள்,துண்புறுத்தல்கள் இலிலாததாகவும் இருத்தல் வேண்டுமென்பதை ஸல்மான்,அபூ தரதாவுக்குத் தெளிவு படுத்தினார்கள்.

التصنيفات

இஸ்லாத்தின் சிறப்பும் சிறப்பம்சங்களும், இஸ்லாத்தில் மனித உரிமைகள்