(لم يكن الذين كفروا) என்பதை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்.

(لم يكن الذين كفروا) என்பதை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்.

(لم يكن الذين كفروا) என்பதை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான். என்று ரஸூல் (ஸல்) அவர்கள் உபைய் இப்னு கஃப் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.அதற்கு அவர் அல்லாஹ் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டானா? என்றார். அதற்கு நபியவர்கள் ஆம் என்றார்கள்.அப்போது 'உபை'அழுதார்.என்று அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்.இன்னொரு அறிவிப்பில் அது உபையை அழும்படி செய்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார் - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் அல்பையினா ஸூராவை உபை அவர்களுக்கு ஓதி காண்பிக்கும்படி அல்லாஹ் தன்னைப் பணித்தான் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் உபையிடம் கூறிய செய்தியை ரஸூல் (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அப்போது,இது எப்படி சாத்தியமாகும்? என்று உபை ஆச்சரியப்படலானார்.ஏனெனில் தரத்தில் குறைந்தவர் தரத்தில் கூடியவரிடம் ஓதிக் காட்டுவதே முறையானது.அவ்வாறின்றி தரம் கூடியவர் தரம் குறைந்தவரிடம் ஓதிக் காட்டுவதல்ல எனினும் உபை அவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி ஸூல் (ஸல்) அவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்ட போது அல்லாஹ் தன் பெயரை நபியவர்களிடம் குறிப்பிட்டிருந்தான் என்பதையும் அவர் உறுதியாக அறிந்து கொண்டார் அப்போது அல்லாஹ் தன் பெயரைக் குறிப்பிட்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சிப் பிரவாகத்தால் அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

التصنيفات

நபித்தோழர்களின் சிறப்புகள்