பரீராவினதும் அவரின் கணவனினதும் சம்பவம் பற்றிய ஹதீஸ்.

பரீராவினதும் அவரின் கணவனினதும் சம்பவம் பற்றிய ஹதீஸ்.

பரீராவினதும் அவரின் கணவரினதும் சம்பவம் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது:ரஸூல் (ஸல்) அவர்கள் பரீராவிடம்"நீங்கள் மீண்டும் அவரிடம் தலாக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டால் எப்படி?" என்றார்கள்.அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதரே!நீங்கள் எனக்குக் கட்டளை பிறப்பிக்கின்றீர்களா?"என்றார்.அதற்கு நபியவர்கள்,"நான் சிபாரிசு செய்கின்றவனாகவே இருக்கின்றேன்"என்று கூறினார்கள்.அபோது பரீரா "நான் அவர் விடயத்தில் தேவையற்றவளாக இருக்கின்றேன்" என்று கூறினார்.என்று அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

பரீராவின் கணவன் முகீஸ் (ரழி) அவர்கள் ஒரு அடிமையாக இருந்தார்.மேலும் பரீரா(ரழி) அவர்களை ஆஇஷா (ரழி) அவர்கள் வாங்கி, விடுதலை செய்யு முன்னர் அவர் ஆஇஷா (ரழி) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தார்.பின்னர் அவருக்கு ஆஇஷா (ரழி) அவர்கள் விடுதலை வழங்கியதை அடுத்து அவர் முகீஸுடன் தொடர்ந்து வாழ்வதா அல்லது அவரிடமிருந்து பிரிந்து செல்வதா என்பதைத் தெரிவு செய்து கொள்ளும் உரிமையும் அவருக்குக் கிடைத்தது.எனவே பரீரா (ரழி) அவர்கள்,அவரை விட்டும் பிரிந்து விட்டார்கள்.எனினும் முகீஸ் (ரழி) அவர்கள் தன் குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட இந்த மோதலுக்குப் பின்னரும் அவருக்கு பரீராவின் மீதிருந்த கடும் அன்பின் காரணமாக பரீரா தனது தீர்மானத்தை வாபஸ் பெறலாம் என்ற எண்ணத்தில் மதீனாவின் வீதிகளிலும்,பாதைகளிலும் அவருக்குப் பின்னால் அழுது கொண்டு சுற்றித் திரியலானார். அப்பொழுது அவரின் கண்ணீர் அவரின் தாடியின் மீது வடிந்தோடியது.எனவே ரஸூல் (ஸல்) அவர்கள் பரீரா (ரழி) அவர்களிடம் "நீங்கள் அவரை வாபஸ் பெற்றுக் கொண்டால் உங்களுக்குப் நன்மை கிடைக்கும்" என்றார்கள். அப்பொழுது பரீரா (ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! நான் கட்டாயம் அவரை மீட்டிக் கொள்ள வேண்டுமென்பது தங்களின் கட்டளையா? என்று கேட்டார்.அதற்கு நபியவர்கள்:நான் அவருக்காக மத்தியஸ்தம் வகிக்கின்றேன்.என்றார்கள்.அப்பொழுது பரீரா (ரழி) அவர்கள்,எனக்கு அவரை மீட்டிக் கொள்ளும் நோக்கமோ,தேவையோ இல்லை என்றார்கள்.

التصنيفات

ஆண் பெண் தொடர்பு