ஸஅத் இப்னு முஆதே!கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை…

ஸஅத் இப்னு முஆதே!கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்.

"எனது சிரிய தந்தை அனஸ் இப்னு நழ்ர் அவர்கள் பத்ரு யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.எனவே அவர் "அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களை எதிர்த்து தாங்கள் புரிந்த முதலாவது யுத்தத்தில் நான் கலந்து கொள்ள வில்லை.எனினும் முஷ்ரிகீன்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அல்லாஹ் எனக்கு வாய்ப்பளித்தால் அப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அல்லாஹ் நிச்சயமாக வெளிப்படுத்துவான்.என்று கூறினார்.பின்னர் உஹுது தினம் வந்தது.அதில் முஸ்லிம்கள் தோழ்வி கண்டபோது அவர் "அல்லாஹ்வே! அவர்கள்-அதாவது தனது தோழர்கள் செய்த காரியத்திற்காக நான் உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.மேலும் அவர்கள்-அதாவது அந்த முஷ்ரிகீன்கள் செய்த காரியத்தின் பொருப்பிலிருந்து நான் நீங்கிக் கொண்டேன்.என்று கூறியவாறு முன்னோக்கி நகர்ந்தார்கள்.அப்போதவர் ஸஅத் இப்னு முஆதைக் கண்டார்கள்.எனவே அவர் "ஸஅத் இப்னு முஆதே! கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்" என்றார்கள்.பின்னர் ஸஅத் "அல்லாஹ்வின் தூதரே! அவர் செய்ததை என்னால் செய்ய முடிய வில்லையே" என்று கூறினர்கள்.என்ற தகவலை அறிவித்த அனஸ் (ரழி) அவர்கள் "நாம் அவரின் உடம்பில் என்பதுக்கும் அதிகமான வாள் வெட்டுக் காயங்கள் அல்லது ஈட்டிக் குத்துக் காயங்கள் அல்லது அம்பு எறிதலுக்கு இலக்கான காயங்கள் இருக்கக் கண்டோம்,மேலும் அவரை முஷ்ரிகீன்கள் சித்திரவதை செய்து கொலை செய்திருந்தனர்.எனவே அவரை யாரும் இனங்காண வில்லை.எனினும் ஈற்றில் அவரின் விரல் மூலம் அவரின் சகோதரி அவரை இனங்கண்டு கொண்டார்.என்று கூறினார்.மேலும் "நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் தாங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குருதியை உண்மையாக்கி வைத்தார்கள்.அவர்களில் பலர் (இறந்து ஷஹாதத் எனும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர்.வேறு சிலர் அதனை எதிர்பார்த்தே இருக்கின்றனர்" (33:23) எனும் திரு வசனம் அவருடைய விடயத்திலும்,அவர் போன்றவர்களின் விடயத்திலும் அருளப்பட்டது என்பது எமது எண்ணம்" என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸ் விளக்கம்:அனஸ் இப்னு மாலிக் அவர்கள் தனது சிறிய தந்தை அனஸ் இப்னு நழ்ர் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது:தனது சிறிய தந்தை அவர்கள் பத்ரில் கலந்து கொள்ளவில்லை.ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள் யுத்தம் செய்வதற்காக பத்ருக்குப் போகவில்லை.மாறாக குறைசிகளின் வர்த்தகக் கோஷ்ட்டி யொன்றை வழி மறிப்பதற்காகவே.அங்கு சென்றார்கள்.அவ்வமயம் அவர்களுடன் முன்னூற்றுச் சொச்சம் பேர்கள் இருந்தனர்.மேலும் எழுபது ஒட்டகங்களும்,இரண்டு குதிரைகளும் இருந்தன.தோழர்கள் அதனைப் பின் தொடர்ந்து சென்றனர்.எனவே அதில் பங்கேற்காத அனஸ் இப்னு நழ்ர் அவர்கள் நபியவர்கள் முஷ்ரிகீன்களை எதிர்த்துப் போரிட்ட முதலாவது யுத்தத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை எடுத்துக் கூறிய பின்னர்"நான் இன்னொரு யுத்தத்தை அடைந்து கொண்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்துவான்,என்றார்கள்.பின்னர் பத்ரு நிகழ்ந்து ஒரு வருடமும் ஒரு மாதமும் கழிந்த பின்னர் உஹுது யுத்தம் நிகழ்ந்தது.அவ்வமயம் மக்கள் ரஸூல் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்தனர்.முற் பகலில் முஸ்லிம்கள் யுத்த களத்தில் வெற்றி வாய்ப்பைப் பெற்றனர்.மேலும் யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஓரிடத்தில் நிலை கொள்ளுமாறும் அவ்விடத்தை விட்டும் நகர வேண்டாம் என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் சில அம்பெறியும் வீரர்களுக்குக் கட்டளைப் பிறப்பித்திருந்தார்கள்,எனினும் முஷ்ரிகீன்களின் அணி சிதருண்டு தோழ்வியைத் தளுவிய,போது அந்த வீரர்களில் சிலர் அந்த இடத்திலிருந்து இறங்கிச் செல்லலாயினர்.அப்பொழுது முஷ்ரிகீன்களின் குதிரை வீரர்கள் அந்தத் திசையிலிருந்து முஸ்லிம்கள் மீது திடீர் தாக்குதல் மேற் கொண்டு முஸ்லிம்களின் அணியில் கலந்து விட்டார்கள்.இதன் காரணமாக முஸ்லிம்களுக்குத் தோழ்வி ஏற்படலாயிற்று.அவ்வமயம் அவர்களில் ஓடக்கூடியவர்கள் எல்லாம் ஓடலாயினர்.எனினும் அனஸ் இப்னு நழ்ர் (ரழி) அவர்களோ எதிரிகளின் திசையை நோக்கி முன்னேறினேறினார்கள்.அவ்வமயம் அவர்கள் "அல்லாஹ்வே! அவர்கள்-அதாவது தனது தோழர்கள் செய்த காரியத்திற்காக நான் உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.மேலும் அவர்கள்-அதாவது ரஸூல் (ஸல்) அவர்களையும்,அவர்களுடனிருந்த முஃமின்களையும் எதிர்த்துப் போரிட்ட முஷ்ரிகீன்களின் கொடிய காரியத்தின் பொருப்பிலிருந்தும் நான் நீங்கி விட்டேன்.என்று கூறினார்கள்.இவ்வாறு அவர் முன்னேறிச் செல்லுகையில் ஸஃத் இப்னு முஆத் (ரழி) அவர்களைக் கண்டார்கள்.அப்பொழுது அவரிடம் ஸஃத் அவர்கள் "எங்கே போகிரீர்கள்?" என்றார்கள்.அதற்கு அவர் "ஸஅத்தே! கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்" என்றார்கள்.இது அவர்களின் கற்பனயல்ல.இது அவர்களின் உண்மையான உணர்வாகும்.இது அல்லாஹ் அவருக்களித்த கராமத் எனும் அற்புத மாகும்.அதன் மூலம் அவர் ஷஹீத் ஆவதற்கு-வீர மரணம் அடைவதற்கு முன்னரே சுவர்க்க வாசனையை அவரால் உணர முடிந்தது.எனவே அவர் யுத்தகளத்தை விட்டும் திரும்பி விடாமல் எதிரிகளை நோக்கி முன்னேறி அவர்களுடன் போரிட்டு ஷஹீதானார்கள்.இதனைக் கண்ட ஸஃது (ரழி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அவர் செய்ததை என்னால் செய்ய முடிய முடிய வில்லையே" என்றார்கள்.அதாவது அவர்கள் மேற் கொண்ட பிரயாசம் போன்று தன்னால் மேற் கொள்ள முடிய வில்லையே என்றார்கள்.மேலும் அவர்களின் மேனியில் வாளால்,அல்லது,ஈட்டியால்,அல்லது அம்பால் ஏற்பட்ட அடியால் என்பதுக்கும் மேற்பட்ட வடுக்கள் உண்டாகி இருந்தன.அதன் காரணமாக அவர்களின் தோல் யாவும் சின்னாபின்னம் ஆகியிருந்தது.எனவே அவர்களின் சகோதரியல்லாது வேறு எவரும் அவரை இனங் கண்டு கொள்ள வில்லை.அதுவும் அவர்களின் விரலின் மூலமே அவர்களை இனங் காண முடிந்தது.மேலும் "நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் தாங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள்.அவர்களில் பலர் (இறந்து ஷஹாதத் எனும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர்.வேறு சிலர் அதனை எதிர்பார்த்தே இருக்கின்றனர்" (33:23) எனும் இறை வசனத்தை அவருடையவும் அவரைப் போன்றவர்களுடையவும் விடயத்தில் அல்லாஹ் இறக்கினான் என முஸ்லிம்கள் எண்ணலாையினர்.ஆம் அவரும் அவரைப் போன்றவர்களும்தான் முதலில் இத் திரு வசனத்திற்கு உரித்துடையவர்கள்.ஏனெனில் "நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்துவான்" என்று அனஸ் (ரழி) அவர்கள் குறிப்பிட்டது போன்று அவர்கள் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குருதியை உண்மையாக்கி வைத்தார்கள்.இவ்வாறு எவரும் செய்ய முடியாத இந்தக் கைங்கரியத்தை அவர்கள் செய்தார்கள்.எனவே அல்லாஹ் அவர்களை ஷஹீதாகச் செய்து அதற்கேற்ற கூலியை அவர்ளுக்கு வழங்கினான்" என்று விவரித்தார்கள்.

التصنيفات

நபித்தோழர்களின் சிறப்புகள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போர்களும் படையனுப்புதல்களும்