அலைக்கஸ்ஸலாம்'என்று சொல்லாதீர்கள்.'அலைக்கஸ்ஸலாம்'என்பது மரணித்தவர்களுக்குக் கூறும் ஸலாமாகும்.எனவே السلامُ عليك…

அலைக்கஸ்ஸலாம்'என்று சொல்லாதீர்கள்.'அலைக்கஸ்ஸலாம்'என்பது மரணித்தவர்களுக்குக் கூறும் ஸலாமாகும்.எனவே السلامُ عليك என்று சொல்லுங்கள்

அபூ ஜர்யு ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நான் ஒரு மனிதரைக் கண்டேன்.அவர் சொல்வதை மக்கள் அமுல் படுத்துகின்றனர்.அவர் எதையேனும் சொன்னால் அதனைஅவர்கள் செய்யாமல் இருப்பதில்லை.எனவே அவர் யாரென அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள்,அவர்தான் அல்லஹ்வின் தூதர் என்றனர்.அப்பெழுது நான்عليك السلام يا رسول الله அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்,என்று இரண்டு தடவைகள் சொன்னேன்.அதற்கு நபியவர்கள் عليك السلام என்று சொல்லாதீர்கள்.عليك السلام என்பது மரணித்தவர்களுக்குச் சொல்லும் ஸலாம் ஆகையால் السلام عليك என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.அப்பொழுது நான், நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தானே,என்றேன்.அதற்கு அவர்"நான் அல்லாஹ்வின் தூதராவேன்.உங்களுக்கு ஏதேனும் சங்கடம் ஏற்படுமிடத்து நீங்கள் அவனை அழைத்தால் அதனை அவன் இல்லாமலாக்குவான்.வரட்சியான காலம் உங்களை வந்தடையு மிடத்து நீங்கள் அவனை அழைத்தால் உங்களுக்கவன் அதில் பயிர்களை முளைக்கச் செய்வான் மேலும் நீங்கள் ஒரு வரண்ட பூமியில் அல்லது பாலை நிலத்தில் இருக்கும் போது உங்களின் வாகணம் காணாமல் போனால் நீங்கள் அவனை அழைத்தால் அதனை அவன் உங்களிடம் திரும்பி வரும்படி செய்திடுவான்" என்று கூறினார்கள்.அப்பொழுது அவரிடம் நான்,எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்,என்றேன்.அதற்கு அன்னார்"யாரையும் திட்டாதீர்கள்" என்றார்கள்.அதன் பின்னர் நான் எந்த வொரு சுதந்திரவானையோ,அடிமையையோ,ஒட்டகத்தையோ,ஆட்டையோ திட்டவில்லை.மேலும் நன்மையான காரியம் சிரியதாக இருப்பினும் அதனை அற்பமாகக் கருதாதீர்கள்.நீங்கள் மலர்ந்த முகத்துடன் உங்களின் சகோதரனுடன் பேசுவதும் நன்மையான கருமத்தைச் சேர்ந்ததுதான்.மேலும் உங்களின் கைலியை உங்களின் பாதிக் கெண்டைக் கால் வரையில் உயர்த்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அப்படி செய்ய மறுத்தால் உங்களின் கரண்டைக் கால் வரையில் ஆக்கிக் கொள்ளுங்கள்.கைலியை நீங்கள் தொங்க விடுவதையிட்டு உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.அது வொரு பெருமைக்குரிய கருமமாகும்.ஏனெனில் பெருமைக்குரிய காரியத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.மேலும் உங்களின் ஒரு குறையை யாரேனும் ஒருவர் அறிந்திருந்து அதளைக் குறிப்பிட்டு அவர் உங்களைத் திட்டினாலோ,அல்லது உங்களை இழிவுபடுத்தினாலோ அவரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கும் ஒரு குறையைக் குறிப்பிட்டு அவரை இழிவுபடுத்தாதீர்கள்.ஏனெனில் அவரின் அந்தச் செயலின் கேடு அவரையே சாரும்"எனக் கூறினார்கள்,என்று அபூ ஜர்ய் ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழ) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழி) அவர்கள் கூறுவதாவது:நான் ஒரு மனிதரைக் கண்டேன்.அவர் சொல்வதை மக்கள் ஏற்று நடக்கின்றனர்.அவர்களுக்கு எதையேனும் அவர் சொன்னால் அதனை அவர்கள் செய்யாமல் இருப்பதில்லை.எனவே அவர்களிடம் அவர் யாரென வினவினேன்.அதற்கு அவர்கள் அவர்தான் அல்லாஹ்வின் தூதர் என்றனர்.அப்பொழுது நான் عليك السلام يا رسول الله، عليك السلام يا رسول الله என்று இரு தடவைகள் கூறினேன்.அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் عليك السلام என்று சொல்லாதீர்கள்.ஏனெனில் அது மரணித்தவர்களுக்குச் சொல்லும் ஸலாம்.ஆகையால் السلام عليك.என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.அப்பொழுது நான் தாங்கள் அல்லாஹ்வின் தூதரா? என்றேன் அதற்கு அன்னார்"ஆம் நான் அல்லாஹ்வின் தூதர்தான்.உங்களுக்கு வருமை,மற்றும் துன்பம் ஏதேனும் ஏற்படுமிடத்து என்னை ரஸூலாக அனுப்பிய அவனை பணிவோடும்,தேவை கொண்டும் நீங்கள் அழைத்தால் அவன் உங்களை விட்டும் அந்த இடைஞ்சலை நீக்கி விடுவான்.மேலும் நிலத்தில் பயிர்கள் முளைக்காத வரட்சியான காலம் உங்களைப் பீடிக்குமிடத்து நீங்கள் அவனை அழைத்தால் அவன் அதில் உங்களுக்குப் பயிர்கள் உண்டாகி அது வளரும்படி செய்வான்.மேலும் நீங்கள் தண்ணீரும்,மனிதரும் இல்லாத ஓர் இடத்தில் இருக்குமிடத்து உங்களின் வாகணம் காணாமல் போனால்,அவ்வமயம் நீங்கள் அவனை அழைத்தால் அவன் அதனை உங்களிடம் திரும்பி வரும்படி செய்வான்"என்றார்கள் அப்பொழுது அவரிடம் நான் எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என்றேன்.அதற்கு அவர் "யாரையும் திட்டாதீர்கள்" என்றார்கள்.எனவே அதன் பின்னர் நான் என்த வொரு சுதந்திரவானையோ,அடிமையையோ,ஒட்டகத்ததையோ,ஆட்டையோ திட்டியதில்லை.மேலும்"நன்மையான ஒரு கருமம் சிரியதாக இருப்பினும் அது சிரியது என்பதற்காக அதனை அற்பமாகக் கருதி அதனை விட்டு விடாதீரிகள்.மேலும் உங்களின் சகோதரனுடன் பேசும் போது அவரை இழிவு படுத்ததாதீர்கள்.அவருடன் மலர்ந்த முகத்துடன் நீங்கள் பேசுவதும் ஒரு நன்மையான கருமமே.மேலும் உங்களின் கைலியையும் ஏனைய ஆடையையும் உங்களின் பாதிக் கெண்டைக் கால் வரையில் உயர்த்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அப்படி செய்ய வில்லை யெனில் உங்களின் கரண்டைக் கால் வரையில் அதனை உயர்த்திக் கொள்ளுங்கள் ஏனெனில் இரண்டு கரண்டைக் கால்களுக்கிடையிலும்,பாதி கெண்டைக் கால் வரையிலும் உங்களின் ஆடையை உயர்த்தி வைத்துக் கொள்வதில் தவறில்லை.மேலும் கைலியைத் தொங்க விடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.அது பெருமைக்குரிய செயலாகும்.மேண்மை மிகு அலவ்லாஹ் அதனை விரும்ப மாட்டான்.மேலும் யாரேனும் உங்களின் பாவ கருமங்களையும்,உங்களின் மோசமான செயல்களையும் கூறி உங்களை திட்டினாலோ,நீங்கள் அவரிடமிருக்கும் அத்தகைய கருமங்களைக் கூறி அவரை இழிவு படுத்தாதீர்கள்.ஏனெனில் இறுதி நாளில் அதன் தண்டனை அவருக்குக் கிடைக்கும்.மேலும் சில வேளை அதில் சிலது ஏலவே இவ்வுலகில் கிடைக்கலாம்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு ஸுலைம் (ரழி) அவர்கள் அறிவரக்கின்றார்கள்.

التصنيفات

நற்குணங்கள்