நற்குணங்கள்

நற்குணங்கள்

3- (முற் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், '(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக் கூடும் என்று சொல்லிவந்தார்

38- "நிச்சயமாக உங்களில் நற் பண்புள்ள ஒருவர் எனக்கு மிகவும் விருப்பமானவரும் மறுமையில் எனக்குப் பக்கத்தில் இருக்கக்கூடியவருமான சிலரைச் சேர்ந்தவராவார்.மேலும் உங்களில் அதிகப் பிரசங்கியும்,வீனாக இலக்கிய மொழி பேசுகிறவனும்,பெருமைக் காரணும்,எனது கடும் கோபத்திற்குரியவரும் மறுமையில் என்னை விட்டும் அதிகத் தொலைவில் இருக்கின்ற வருமாகிய சிலரைச் சேர்ந்தவர்களாவர்"

42- 'நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் கோபம் கொள்ள வேண்டாம் (பிறரை அதிகவிலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை உயர்த்த வேண்டாம். ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டாம், ஒருவரை ஒருவர் புறக்கணிக்க வேண்டாம். உங்களில் சிலர் சிலரின் வியாபரத்திற்கு எதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்