நபி (ஸல்) அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்’ என ஒரு மனிதர் கூறினார். நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்” என…

நபி (ஸல்) அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்’ என ஒரு மனிதர் கூறினார். நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்” என பதிலளித்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் கோபப்படாதீர்” என்றே கூறினார்கள்.

உமர் (ரலி) கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்’ என ஒரு மனிதர் கூறினார். நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்” என பதிலளித்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் கோபப்படாதீர்” என்றே கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ஈருலகிலும் தனக்குப் பயனளிக்கக் கூடிய ஒன்றை ஏவுமாறு நபித்தோழர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது கோபப்பட வேண்டாமென ஏவினார்கள். இந்த உபதேசத்தில் மனிதனின் பல தீங்குகள் தடுத்து நிறுத்தப் படுகின்றன.

فوائد الحديث

எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்’ என்ற வார்த்தையின் மூலம் நபித்தோழர்கள் தமக்குப் பயனளிக்கும் விடயங்களில் கொண்டுள்ள ஆர்வம் தென்படுகின்றது.

ஒவ்வொரு நோயாளியையும் அவரது நோய்க்குத் தகுந்தவாறே சிகிச்சையளிக்க வேண்டும். இந்த மனிதர் அதிக கோபமுள்ளவராக இருந்ததாலே- சரியாக சொல்வதாயின் - நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பிரத்தியேகமாக இந்த உபதேசத்தை செய்தார்கள்.

கோபம் கொள்வதை விட்டும் இங்கு எச்சரிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அதுதான் அனைத்து கெடுதிகளையும் ஒருங்கிணைக்கக் கூடியாதாகும். அதிலிருந்து தவிர்ந்து கொள்வதே அனைத்து நலவுகளையும் ஒருங்கிணைக்கக் கூடியாதாகும்.

சில குணங்கள் ஏவப்பட்டுள்ளன, அவற்றை மனிதன் பழகி, அவனிடம் அவை வழக்கமாகி விட்டால் கோபத்தின் காரணிகள் ஏற்படும் போது அக்குணங்கள் அவனைக் கோபம் ஏற்படுவதைவிட்டும் தடுக்கும். உதாரணமாக தர்மம், கொடை, நிதானம், வெட்கம் போன்ற சில குணங்களே அவையாகும்.

தீய குணங்களைத் தடுப்பது இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் உள்ளதாகும்.

அறிஞர்களிடம் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டலாம்.

மேலதிகமாக உபதேசிக்குமாறும் வேண்டலாம்.

தீங்குகள் ஏற்பட முன் தடுத்தல் எனும் பொதுவிதிக்கு இது ஆதாரமாக உள்ளது.

ஒருங்கிணைந்த வார்த்தைகள் மூலம் நபியவர்கள் பிரத்தியேகமாக சிறப்பிக்கப்பட்டதற்கு இதில் ஆதாரமுள்ளது.

ஒரு விடயம் தடுக்கப்படுமென்றால் அதன் காரணிகளும் சேர்ந்தே தடுக்கப்படுவதுடன், அதனைத் தவிர்ந்து கொள்ளத் துணைபுரிபவற்றைக் கையாளும் படியான ஏவலும் அதில் உள்ளடங்கும்.

التصنيفات

நற்குணங்கள்