ஒரு முஃமின் தன் முஃமினான சகோதரனின் கண்ணாடியாவான்.

ஒரு முஃமின் தன் முஃமினான சகோதரனின் கண்ணாடியாவான்.

ஒரு முஃமின் தன் முஃமினான சகோதரனின் கண்ணாடியாவான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸனானது-சிறந்தது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

ரஸூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முஃமினை இன்னொரு முஃமினின் கண்ணாடி என்று உயர்ந்த இலக்கிய பாணியில் வர்ணனை செய்துள்ளார்கள்.அதாவது பளபளப்பான நிழல் கண்ணாடியில் ஒருவன் தன்னைப் பார்த்து தனது குறைகளை எப்படி நிவர்த்தி செய்து கொள்கின்றானோ அதுபோன்று தன் சகோதர முஃமின் ஒருவனின் குறையைக் காணும் இன்னொரு முஃமின் அவனுக்கு அதனை உணர்த்தி அவனைச் சீர்திருத்த அவனுக்கு வழி காட்டுவது அவசியம் என்பதே இதன் கருத்தாகும்.ஆனால் மக்கள் முன்னிலையில் அவனுக்கு அறிவுரை வழங்க முற்படுவதன் மூலம் அவனுக்கு அவமானம் உண்டாகலாம் என்ற படியால் இது அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ வேண்டுமேயல்லாது மக்கள் மத்தியில் நிகழக் கூடாது.

التصنيفات

நற்குணங்கள்