அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போதுமெனும் குணத்தையும்,நன்மையையும் வைத்திருக்கின்றானோ அவர்களை அதன்…

அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போதுமெனும் குணத்தையும்,நன்மையையும் வைத்திருக்கின்றானோ அவர்களை அதன் பொருப்பிலேயே நான் விட்டு விடுகிறேன்.அம்ர் இப்னு தக்லிபுவும் அவர்களைச் சார்ந்தவரே.

"கனீமத்" எனும் யுத்த வெற்றிப் பொருட்கள் சில அல்லது யுத்த கைதிகள் சிலர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் எடுத்து வரப்பட்டனர்.அதனை நபியவர்கள் பங்கு வைக்கும் போது சிலருக்குக் கொடுத்தார்கள் இன்னும் சிலருக்குக் கொடுக்கவில்லை.எனவே யாருக்கு நபியவர்கள் கொடுக்க வில்லையோ அவர்கள் நபிகளாரைக் கண்டனம் செய்தனர்.இந்த செய்தி நபியவர்களுக்கு எட்டியது.எனவே அன்னார் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துரைத்த பின்னர் "அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையில் நான் ஒருவருக்குக் கொடுக்கின்றேன்.இன்னொருவருக்குக் கொடுப்பதில்லை.ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ என்னிடமவர் நான் யாருக்குக் கொடுக்கின்றோனோ அவரை விடவும் விருப்பத்திற்குரியவராவார்.எனினும் நான் சில சமூகத்தினரிடம் அவர்களின் மனதில் இருக்கும் துக்கம் துயரம் என்பதைக் கண்டு கொண்டதன் காரணமாகவே நான் அவர்களுக்குக் கொடுக்கின்றேன்.மேலும் அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போதுமெனும் குணத்தையும்,நன்மையையும் வைத்திரக்கின்றானோ அவர்களை அதன் பொருப்பிலேயே நான் விட்டு விடுகிறேன் அம்ரு இப்னு தக்லிபுவும் அவர்களைச் சார்ந்தவர்களே"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அம்ர் இப்னு தக்லிப் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

யுத்தத்தில் கிடைத்த வெற்றிப் பொருளான கனீமத் அல்லது யுத்த கைதிகள் சிலர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் எடுத்து வரப்பட்டனர்.அதனை நபியவர்கள் பங்கு வைக்கும் போது சிலருக்குக் கொடுத்தார்கள்.இன்னும் சிலருக்குக் கொடுக்காமல் விட்டு விட்டார்கள்.அதாவது சிலரின் உள்ளத்தைச் சாந்தப்படுத்தும் நோக்கில் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.மேலும் எவர்களுக்கு அல்லாஹ் ஈமானையும்,யகீனையும் வழங்கியிருந்தானோ அவர்களின் உள்ளம் உறுதி வாய்ந்ததாக இருந்ததன் காரணமாக அவர்களுக்குக் கொடுக்கவில்லை.எனவே அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களுக்குத் தராமல் மற்றவர்களுக்குக் கொடுக்கக் காரணம் மற்றவர்கள் மார்க்கத்தில் சிறந்தவர்கள் என்பதற்காகவோ என்று எண்ணலாயினர்.ஆகையால் அவர்கள் தங்கள் மத்தியில் நபியவர்களைக் கண்டிக்கவும்,தூற்றவும் ஆரம்பித்தனர்.இந்த செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.எனவே அவர்ரகளை எல்லாம் ரஸூல் (ஸல்) ஒன்று கூட்டி அவர்கள் முன் நின்று ஒரு உரை நிகழ்த்தினார்கள்.அவ்வமயம் புகழுக்குரிய அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர் நபியவர்கள்"அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையில் நான் ஒருவருக்குக் கொடுக்கின்றேன்.இன்னொருவருக்குக் கொடுப்பதில்லை.ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ எனேனிடமவர் நான் யாருக்குக் கொடுக்கின்றோனோ அவரை விடவும் விருப்பத்திற்குரியவராவார்"என்று கூறினார்கள்.அதாவது நான் சிலருக்குக் கொடுத்தும் இன்னும் சிலருக்குக் கொடுக்காமலும் இருப்பதன் கருத்து நான் சிலரை நேசிக்கின்றேன் மற்றும் சிலரை நேசிக்கவில்லை,என்பதல்ல.மாறாக நான் யாருக்குக் கொடுத்தேனோ அவர்களை விடவும் யாருக்கு நான் கொடுக்கவில்லையோ அவர்களே என்னிடம் மிகவும் அன்புக்குரியவர்கள்.என்றார்கள்.பின்னர் தாங்கள் இப்படிச் செய்ததற்காரணத்தைத் தெளிவு படுத்தரினார்கள்.அவ்வமயம் எவர்களின் மனதில் துக்கம் துயரம் இருக்க நான் கண்டேனோ அவர்களுக்கு கனீமத் எனும் யுத்தத்தில் கிடைத்த வெற்றிப் பொருள் அவர்களுக்குக் வழங்சகப்படாது போனால் அவர்களிளின் கவலை இன்னும் அதிகரித்துவிடும் என்பதால் அவர்களின் உள்ளத்தைச் சாந்தப்படுத்து முகமாக அதனை அவர்களுக்கு வழங்கினேன்,என்று விளக்கமளித்த நபியவர்கள் "மேலும் அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போது மெனும் குணத்தை வைத்திரக்கின்றானோ அவர்களை அதன் பொருப்பிலேயே நான் விட்டு விடுகிறேன்" என்று கூறினார்கள்.அதாவது சில கூட்டத்தினருக்கு நான் கொடுக்காமல் விட்டு விடுகின்றேன் என்றால் அவர்களுக்கு அல்லாஹ் போது மெனும் மனதையும்,ஈமானின் பலத்தையும் அதன் உறுதியையும் கொடுத்திருக்கின்ற காரணமாக அவர்களை அதன் பொருப்பில் விட்டு விடுகின்றேன்,மேலும் மனிதரில் எவருடைய ஈமான் உறுதியானதாக இருக்கின்றதோ அவர்களின் பொருப்பை அதன் பால் நான் சாட்டி விடுகின்றேன் அப்படியான கூட்டத்தைச் சார்ந்தவர்தான் அம்ர் இப்னு தக்லிப் என்பாரும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு தக்லிப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் பிரிதொரு ஹதீஸில்"ஒருவர் என்னிடம் மிகவும் அன்புக்குரியவராக இருந்த போதிலும் மற்றவருக்கு நான் கொடுத்து விடுகிறேன்.என்றால் அவர் நரகில் முகம் குப்புர வீழ்ந்து விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.மேலும் அல்லாஹ்வின் தூதர் தன்னைப் பாராட்டியதைக் கேள்வியுற்ற அம்ரு (ரழி) அவர்கள்"அல்லாஹ்வின் மீது ஆணையாக ரஸூல் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றிக் கூறிய அந்த வார்த்தைக்குப் பதிலாக எனக்குச் சிவப்பு ஒட்டகங்கள் தரப்படுமாயின் அதனை நான் விரும்ப மாட்டேன்" என்று கூறினார்கள்.அதாவது நபியவர்கள் தன்னைப் பாரட்டி கௌரவித்த அந்த பாராட்டுரைக்குப் பதிலாகத் அறபு மக்களின் பெறுமதி மிக்க செல்வமான சிவப்பு ஒட்டகங்கள், தனக்குத் தரப்படுமாயின் அதனைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுப் பரைசாட்டினார்.

التصنيفات

நற்குணங்கள், உளச் செயற்பாடுகள்