'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'

'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் மிக்தாம் இப்னு மஃதீ கர்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : 'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

முஃமின்களுக்கு மத்தியில் தொடர்பை –உறவை- வலுப்படுத்தி அன்பையும் நேசத்தையும் பரப்பும்; வழிமுறையொன்றை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.

فوائد الحديث

உலக நலனுக்காக அல்லாது அல்லாஹ்வுக்காக மாத்திரம் தூய்மையான நேசம் கொள்வதின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.

அன்பும் நேசமும் மேலும் அதிகரிக்க அல்லாஹ்வுக்காக நேசிக்கப்பட்டவரிடம் தனது நேசத்தை, நேசிப்பவர் வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.

ஈமானிய சகோதரத்துவத்தை முஃமின்களுக்கு மத்தியில் வலுப்படுத்துவதானது அன்பை பரப்பவும், சமூகத்தை சிதைவு மற்றும் பிரிவினை போன்றனவற்றை விட்டும் பாதுகாக்கவும் செய்யும்.

التصنيفات

நற்குணங்கள், பேசுதல், அமைதிகாத்தல் என்பவற்றின் ஒழுங்குகள்