எவர் தனக்குத் தர்க்கம் புரிய உரிமை இருந்தும் அதனைத் தவிர்ந்து கொண்டாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தின்…

எவர் தனக்குத் தர்க்கம் புரிய உரிமை இருந்தும் அதனைத் தவிர்ந்து கொண்டாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தின் ஓரத்திலுள்ள வீட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு பொருப்பேற்றுள்ளேன்

"எவர் தனக்கு தர்க்கம் புரியும் உரிமஇருந்தும் அதனைத் தவிர்த்து கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் ஓரத்திலுள்ள வீட்டையும்,எவர் பரிகாசத்திற்கேனும் பொய் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் மத்தியிலிருக்கும் வீட்டையும்,எவர் தனது பண்புகளை அழகுடையதாக ஆக்கிக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் மேலிருக்கும் வீட்டையும் பெற்றுக் கொடுப்பதற்கு நான் பொருப்புடையவனாவேன்"என்று ரஸூல் (ஸல்) அவ்கள் கூறினார்கள் என அபூ உமாமா அல்பாஹிலீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஹஸனானது-சிறந்தது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஹதீஸ் விளக்கம்:தர்க்கத்தில் ஈடுபடுவதன் மூலம் காலம் விரயமாகின்ற படியாலும் அது பகைமைக்குக் காரணமாக அமைகின்ற படியாலும் அதில் ஈடுபடுவதை நபியவர்கள் விரும்ப வில்லை ஆகையால் ஏதேனுமொரு விடயத்தில் தனக்குத் தர்க்கம் புரியும் உரிமை இருந்தும் எவர் அதனைத் தவிர்த்துக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்திற்கு வெளியே அதன் அருகில் நிழல் தருவதற்காக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் வீட்டை பெற்றுக் கொடுக்கும் பொருப்பை நபியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் மேலும் உண்மைக்குப் புறம்பாகப் பரிகாசத்திற்கேனும் பொய் பேசுவதை எவர் தவிர்த்துக் கொண்டாரோ அவருக்கு சுவர்க்கத்தின் நடுவிலிருக்கும் வீட்டையும்,நல்லொழுக்கம் உள்ளவருக்கு,அவர் நல்லொழுக்கப் பயிற்சி மூலம் தன் ஆத்மாவை சீர்திருத்திக் கொண்டிருந்தாலும் அவருக்கு சுவர்க்கத்தின் மேலிருக்கும் வீட்டையும் பெற்ருக் கொடுக்கும் பொருப்பைத் தான் ஏற்றுக் கொண்டுள்ளதாக ரஸூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் அறியத் தந்துள்ளார்கள்.

التصنيفات

நற்குணங்கள்