நற்பண்புள்ள அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் பதவியை அடைவான்.

நற்பண்புள்ள அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் பதவியை அடைவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "நற்பண்புள்ள அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் பதவியை அடைவான்".

[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸ் நற்பண்புள்ள அடியானின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. அதாவது அவனின் நல்ல பண்புகள் அவனுக்கு அல்லாஹ்விடத்தில் உயர்ந்த பதவியையும் சுவர்க்கத்தில்,நோன்பாளியினதும் இரவில் நின்று வணங்குவோனினதும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுக்கும். ஆனால் இவ்விரு அமல்களும் மகத்தானவை, சிரமமானவை என்பதுடன், நற்பண்புகள் இலகுவான காரியம் என்பதும் இங்கு எடுத்துக் காட்டபட்டுள்ளது.

فوائد الحديث

நற்பண்பு தொடர்ந்து நோன்பு நோற்கக்கூடிய, சோர்வின்றி இரவு வணக்கத்தில் ஈடுபடக்கூடியவரின் அந்தஸ்தை ஓர் அடியான் அடையுமளவு அதன் கூலி மற்றும், நன்மைகளைப் பன்மடங்காக்குகின்றது.

التصنيفات

நற்குணங்கள்