நீங்கள் உங்கள் பணத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.எனினும் உங்களில் முக மலர்ச்சியுடையவர்களும்…

நீங்கள் உங்கள் பணத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.எனினும் உங்களில் முக மலர்ச்சியுடையவர்களும் நற்குணமுடையவர்களுமே அவர்களின் ஆதரவைப் பெற முடியும்

"நீங்கள் உங்களின் பணத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.எனினும் உங்களில் முக மலர்ச்சியுடையவர்களும் நற்குணமுடையவர்களுமே அவர்களின் ஆதரவை பெற முடியும்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஹஸன் லிகைரிஹி-பிரிதொன்றின் மூலம் ஹஸன்-சிறந்தது என்ற தரத்தைப் பெற்றது] [இந்த ஹதீஸை ஹாகிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

மக்களைச் சந்திக்கும் போது முக மலர்ச்சியுடனும்,நற் குணத்துடனும் இருப்பதுவும்,அவர்களுடன் நல்ல முறையில் உரையாடி அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் சிறப்புக்குரியதாகும் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.இது எல்லா மனிதனாலும் செய்ய இயலுமான காரியமாகும்.இந்தப் பண்புகள் மூலம்தான் மக்களின் அன்பை ஈர்த்துக் கொள்ளவும்,சமூகத்தில் மக்களிடையே அந்நியோந்நியத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்

التصنيفات

நற்குணங்கள்