மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு…

மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நற் பண்புகளுமாகும்

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : மனிதர்களை சுவர்க்கத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நற் பண்புகளுமாகும்'. என்றார்கள் மேலும் நரகத்தினுள் அதிகமாக நுழைவிக்கச் செய்யும் செயல்கள் என்ன என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் நாவும் மறையுறுப்பும் என்றார்கள்.

[சிறந்தது சரியானது]

الشرح

சுவர்க்கத்தை அடையச் செய்யும் மிகப் பெரும் காரணிகள் -வழிகள் இரண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். அந்த இரண்டு வழிகளும் பின்வருமாறு: ஒன்று அல்லாஹ்வின் மீதான அச்சம், மற்றையது நற்பண்புகள். இறையச்சம் என்பது இறைகட்டளைகளை கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலமும், அவன் தடுத்தவற்றை தவிர்ந்திருப்பதன் மூலமும் உமக்கும் அல்லாஹ்வுடைய தன்டனைக்கும் மத்தியில் ஒரு திறையை ஏற்படுத்திக் கொள்வதாகும். நற்குணம் என்பது முகமலர்ச்சியும், பிறருக்கு நன்மை செய்வதும், தொந்தரவு செய்யாதிருப்பதுமாகும். நரகத்தினுள் பிரவேசிக்கச் செய்யும் மிகப் பெரும் காரணிகள் -வழிகள் இரண்டாகும், அவை : நாவும் மறையுறுப்புமாகும். நாவின் விபரீதங்களுள் பொய் சொல்வது, புறம் பேசுதல், கோள் சொல்லித் திரிதல் போன்ற பாவங்கள் இடம்பெறுகின்றன. மறையுறுப்பின் விபரீதங்களுள் விபச்சாரம், ஓரினச்சேர்க்கை போன்ற பல பாவங்கள் இடம் பெறுகின்றன.

فوائد الحديث

சுவர்கம் செல்ல அல்லாஹ் மற்றும் மனிதர்களுடன் தொடர்பான பல விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இறையச்சம் அல்லாஹ்வுடன் தொடர்பானதாகவும் நற்குணம் மனிதர்களுடன் தொடர்பானதாகவும் உள்ளது.

நாவின் விபரீதம், குறித்த அடியானை நரகிற்கு இட்டுச்செல்லும் காரணிகளின் ஒன்றாக உள்ளது.

மனோ இச்சைக்குகட்டுப்பட்டு மானக்கேடான விடயங்களில் ஈடுபடுவது மனிதனை அதிகமாக நரகிற்கு கொண்டு போய் சேர்க்கும் காரியங்களாகும்.

التصنيفات

நற்குணங்கள், சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்