சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்

1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும், (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்'