இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை…

இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது' என்று சொன்னார்கள். (அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்'.) என்று அவர் (ஸல்) கூறினார்கள்

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் அதனைக் கேட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று சொன்னோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது' என்று சொன்னார்கள். (அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்'.) என்று அவர் (ஸல்) கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஏதோ மேலிருந்து ஒரு பொருள் விழுந்தது போன்ற ஒரு பயங்கரமான சத்தத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேட்டார்கள். உடனே அவர்கள் அங்கிருந்த தோழர்களிடம் அந்த சப்தம் பற்றிக் கேட்டபோது, இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று அவர்கள் பதிலளித்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்களிடம் ' நிச்சயமாக நீங்கள் செவிமடுத்த அந்த சப்பதம் என்னவென்றால்; எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நரகத்தின் விளிம்பிலிருந்து எறியப்பட்ட ஒரு கல், அது நரகத்தின் ஆழத்தை அடையும் வரை கீழ் நோக்கி சென்று கொண்டே இருந்தது, அது இப்போது நரகத்தின் அடியை சென்றடைந்தது விட்டது, அதன் சப்தத்தைத்தான் தற்போது நீங்கள் கேட்டீர்கள் என நபி ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

நற்காரியங்களை செய்வதன் மூலம் மறுமைக்கு தயாராக வேண்டும் எனத் தூண்டப்பட்டிருப்பதோடு, நரகத்தை விட்டும் எச்சரிக்கப்பட்டிருத்தல்.

மனிதன் தனக்கு தெரியாத ஒரு விடயத்தை அது குறித்த அறிவு அல்லாஹ்விடம் உண்டு என அல்லாஹ்விடம் சாட்டிவிடுவது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.

ஆசிரியர் (அல்லது அழைப்பாளர்) ஒரு விடயத்தை தெளிவு படுத்த முன் அவ்விடயத்தை யாரிடம் முன்வைக்கிறாரோ அவர்களின்; ஆர்வத்தை தூண்டி கவனத்தை ஈர்க்க வேண்டும். இச்செயற்பாடானது குறிப்பிட்ட விடயத்தை நன்கு புரியவைப்பதற்கு வழிவகுக்கும்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்