'நரகம் ஆசா பாசங்களைக் (மனோ இச்சைகளைக்) கொண்டு திரையிடப்பட்டுள்ளது, சுவர்க்கம் விருப்பமற்ற விடயங்களைக் கொண்டு…

'நரகம் ஆசா பாசங்களைக் (மனோ இச்சைகளைக்) கொண்டு திரையிடப்பட்டுள்ளது, சுவர்க்கம் விருப்பமற்ற விடயங்களைக் கொண்டு திரையிடப்பட்டுள்ளது'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'நரகம் ஆசா பாசங்களைக் (மனோ இச்சைகளைக்) கொண்டு திரையிடப்பட்டுள்ளது, சுவர்க்கம் விருப்பமற்ற விடயங்களைக் கொண்டு திரையிடப்பட்டுள்ளது'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நரகமானது மனம் விரும்பும் ஹராமான காரியங்களை செய்வது, கடமைகளை புறக்கணித்து அதில் அலட்சியமாக இருப்பது போன்ற விடயங்களால் திரையிடப்பட்டுள்ளது என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். இந்த விடயத்தில் யார் தனது மனோ இச்சையைப் பின்பற்றி நடந்து கொள்கிறாரோ அவர் நரகிற்கு உரித்தானவராக மாறிவிடுவார். மனம் விரும்பாத விடயங்கள் மூலம்தான் சுவர்க்கம் சூழப்பட்டுள்ளது. மனம் விரும்பாத விடயங்களில்: இறைக்கட்டளைகளை தொடராக பேணிவருதல், ஹராமான விடயங்களை விட்டுவிடுதல், இந்த விடயங்களில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளல் போன்றவை இதில் உள்ளவையாகும். இந்த விடயங்களில் தீவிரமாக இருந்து தன்னை சிரமப்பட்டுக் காப்பாற்றிக் கொள்பவர் சுவர்க்கம் நுழைய தகுதி பெறுவார்.

فوائد الحديث

ஷைத்தான் தீய மற்றும் அசிங்கமான விடயங்களை அலங்கரித்துக் காட்டுவதே மனிதன் மனோ இச்சையில் வீழ்வதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் அவற்றை மனம் நல்லதாக –அழகானதாக் கண்டு அதில் விருப்புக்கொள்கிறது.

தடைசெய்யப்பட்ட ஆசாபாசங்களை விட்டும் விலகி இருக்குமாறு கட்டளையிடப்பட்டிருத்தல். ஏனெனில் அதுவே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழியாகும். மனம் விரும்பாத விடயங்களில் பொறுமையாக இருக்குமாறு பணிக்கப்பட்டிருத்தல். ஏனெனில் அதுவே சுவர்க்கத்தின் பாதையாகும்.

உள்ளத்துடன் போராடி வணக்கவழிபாடுகளில் பிரயத்தனம் கொள்ளுதல், வணக்க வழிபாடுகளை சூழ்ந்துள்ள சிரமங்களையும், மனம் விரும்பாத விடயங்களையும் சகித்துக்கொள்வதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்