“பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக்…

“பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட மழுங்க வைப்பவர்களாகவும் உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை”

அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோன்புப் பெருநாட் தினமோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாட் தினமோ தொழுமிடத்திற்குச் சென்ற போது, பெண்களிடம் சென்று இவ்வாறு கூறினார்கள்: “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட மழுங்க வைப்பவர்களாகவும் உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள், “மார்க்கத்திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

ஒரு பெருநாள் தினம் நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்திற்குச் சென்றார்கள். ஏற்கனவே, பெண்களிடம், அவர்களுக்குத் தனியாக உபதேசிப்பதாக வாக்களித்திருந்தார்கள். அந்நாளில் அதை நிறைவேற்றினார்கள். நபியவர்கள் இவ்வாறு உபதேசித்தார்கள்: பெண்களே! தர்மம் செய்யுங்கள். அதிகம் பாவமன்னிப்புக் கேளுங்கள். இவ்விரண்டும் பாவமன்னிப்பின் மிக முக்கிய காரணிகளாகும். மிஃராஜ் உடைய இரவில், உங்களை நான் நரகவாதிகளில் அதிகமானவர்களாகக் கண்டேன். அப்போது அவர்களில் இருந்த அறிவும், புத்திசாதுர்யமும், நிதானமும் மிக்க ஒரு பெண், நாம் ஏன் நரகவாதிகளில் அதிகமானவர்களாக இருக்க வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள், 'பல காரணங்களினால். அதிகம் ஏசுகின்றீர்கள், சபிக்கின்றீர்கள், கணவனது உரிமையை மறுக்கின்றீர்கள். பின்பு நபியவர்கள் அவர்களை இவ்வாறு வர்ணித்தார்கள்: அறிவும், தீர்க்கமும், தன் விவகாரங்களைக் கையாளும் திறமையும் கொண்ட ஒரு ஆணையே மிகைப்பவர்களாக, அறிவும், மார்க்கமும் குறைவாக உள்ள பெண்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை. அப்போது அப்பெண், 'அல்லாஹ்வின் தூதரே! அறிவிலும், மார்க்கத்திலும் குறையிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: பகுத்தறிவுக் குறைபாடென்பது, ஒரு ஆணின் சாட்சியத்திற்கு நிகராக இரு பெண்களின் சாட்சியம் இருப்பதாகும். இது அவளது பகுத்தறிவுக் குறைபாடாகும். மார்க்கத்தில் குறைபாடென்பது, நல்லமல்களின் குறைபாடாகும். அதாவது, மாதவிடாய் காரணமாக பல நாட்கள் அவள் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கின்றாள். இதுவே மார்க்கத்தில் குறைபாடு. எனினும், இதற்காக அவர்கள் குற்றம்பிடிக்கப்படவோ, கண்டிக்கப் படவோ மாட்டார்கள். இது அவர்களது இயற்கையான படைகோலம். இது, மனிதன் இயற்கையிலேயே பணத்தை விரும்புபவனாகவும், தன் விவகாரங்களில் அவசரப்படுபவனாகவும், அறியாமையுள்ளவனாகவும் இருப்பதைப் போல. இங்கு நபியவர்கள் அதைக் குறித்துக் கூறியது, அவர்களால் குழப்பத்திற்குள்ளாகாமல் இருக்கவே.

فوائد الحديث

பெண்கள் பெருநாள் தொழுகைக்காக வெளிக்கிளம்புவதும், அவர்களுக்கு தனியாக உபதேசம் செய்யப்படுவதும் ஸுன்னாவாகும்.

கணவனுக்கு நன்றி மறப்பது, அதிகம் சபிப்பது என்பவை பெரும்பாவங்களாகும். நரகத்தின் அச்சுறுத்தல் பாவம் பெரியது என்பதற்கான அறிகுறியாகும்.

இங்கு, ஈமான் குறைவதும், கூடுவதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது, யாரது வணக்கம் அதிகரிக்கின்றதோ, அவரது ஈமானும் மார்க்கமும் அதிகரிக்கும். யாரது வணக்கம் குறைகின்றதோ, அவரது மார்க்கத்திலும் குறைவு ஏற்படும்.

இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள் : மனித அறிவு குறையவும், கூடவும் செய்யும். ஈமானும் அவ்வாறுதான். இங்கு பெண்களிடம் உள்ள குறையைக் கூறுவதன் மூலம், அவர்களைக் கண்டிப்பது நோக்கமல்ல. ஏனெனில் அடிப்படையில் அவர்கள் படைக்கப்பட்டிருப்பது அவ்வாறுதான். இந்த விழிப்பூட்டலுக்கான காரணம், அவர்களால் குழப்பத்திற்கு உள்ளாவதை எச்சரிப்பது தான்! இதனால் தான் தண்டனை குறிக்கப்பட்டிருப்பது, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள நன்றி மறத்தல் போன்ற செயல்களுக்காகவே அன்றி, அந்த குறைக்காக அல்ல. மார்க்கத்தில் குறைபாடு என்பது பாவம் நிகழும் விடயங்களுக்கு மாத்திரமானது அல்ல. மாறாக, அதைவிட பரந்த அம்சங்களிலும் அது நிகழும்.

ஒரு மாணவர் அறிஞரிடமும், பின்பற்றுபவர் பின்பற்றப்படுபவரிடமும், அவர்கள் கூறியது புரியாத போது விளக்கம் கேட்பது இந்த ஹதீஸில் உணர்த்தப்படுகின்றது.

பெண்ணின் சாட்சியம் ஆணின் சாட்சியத்தின் அரைவாசி என்பதையும் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. அவள் (இது போன்றவற்றை) குறைவாகவே நினைவில் வைத்திருப்பது இதன் காரணமாகும்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த கூற்றை விளக்கும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்: அவர்கள் நரகில் அதிகமானவர்களாக இருப்பதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று என்பதாகவே எனக்கு விளங்குகின்றது. ஏனெனில் தீர்க்கமான ஒரு ஆணின் அறிவை மழுங்கடிக்கச் செய்து, தேவையற்ற விடயங்களை அவன் பேசவும் செய்யவும் இவர்கள் காரணமாக இருப்பதால் பாவத்தில் அவனோடு இவர்களும் கூட்டுச் சேர்கின்றார்கள் என்பது மாத்திரமல்லாமல், அதன் மூலம் அவனையும் விட அதிகமாக பாவம் செய்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

பெண் தனது மாதவிடாய் காலத்திலும் பிரசவ இரத்தம் வெளிப்படும் காலத்திலும் தொழவோ, நோன்பு பிடிக்கவோ மாட்டாள். பின்பு சுத்தமடைந்ததும் நோன்பை மட்டும் கழாச் செய்வாள்.

இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நற்குணம் வெளிப்படுகின்றது. அதாவது, பெண்களுடைய கேள்விகளுக்கு கண்டித்தலோ, ஏசுதலோ இன்றி பதில் அளித்தார்கள்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: தர்மம் தண்டனையை விட்டும் காக்கும். படைப்புக்களுக்கு மத்தியில் உள்ள பாவங்களையும் அது மன்னிக்கச் செய்யும்.

இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள்: பெண்களிடம் மார்க்கத்தில் குறைவு ஏற்படுவது அவர்கள் மாதவிடாய் காலத்தில் தொழுகையையும் நோன்பையும் விடுவதாலே! யாரது வணக்கங்கள் அதிகரிக்கின்றனவோ, அவர்களது ஈமானும் மார்க்கமும் அதிகரிக்கும். யாரது வணக்கம் குறைகின்றதோ, அவரது மார்க்கத்தில் குறைவு ஏற்படும். மார்க்கத்தில் குறை ஏற்படுவது ஒன்றில் பாவமாக இருக்கும். உதாரணமாக, தொழுகை, நோன்பு போன்ற கடமையான வணக்கங்களை நியாயமான காரணம் இன்றி விடுவதைப் போல. சிலவேளை, அவ்வாறு குறைவு ஏற்படுவது பாவம் இல்லாமலும் இருக்கும். உதாரணமாக, ஒருவர் தன் மீது கடமை அல்லாத யுத்தம், ஜும்ஆ போன்றதை நியாயமான காரணமின்றி விடுவதைப் போல. சிலவேளை, அவ்வாறு குறைவு ஏற்படுவது அவர் மீது விதிக்கப்பட்ட ஒன்றின் காரணமாகவும் இருக்கலாம் உதாரணமாக மாதவிடாய்ப் பெண், நோன்பையும் தொழுகையையும் விடுவதைப் போல.

التصنيفات

பெண்களுக்கான சட்டங்கள், சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்