(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற

(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை' என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்றும் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மறுமை நாளில் மரணம் கருப்பும் வெள்ளை நிறமும் கலந்த ஆண் ஆட்டின் தோற்றத்தில் கொண்டுவரப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். அவ்வேளை சொர்க்க வாசிகளே! என அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் உடனே தங்களது கழுத்துக்களையும் பிடரிகளையும்; நீட்டிக்கொண்டு தலைகளை உயர்த்திப் பார்ப்பார்கள்;. அப்போது அவர்களிடம் இதனைத் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பார். உடனே அவர்கள் கண்டு அறிந்திருந்தனால் ஆம்' இது மரணம் எனப்பதிலளிப்பார்கள். பின் அழைப்பாளர் நரகவாதிகளே! என அழைப்பு விடுப்பார் அவர்கள் உடனே அவர்கள் தங்களது கழுத்துக்களையும் பிடரிகளையும்; நீட்டிக்கொண்டு தலைகளை உயர்த்திப் பார்ப்பார்கள்;. அப்போது அவர்களிடம் இதனைத் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்ப்பார். உடனே அவர்கள் கண்டு அறிந்திருந்தனால் 'ஆம்' இது மரணம் எனப்பதிலளிப்பார்கள். உடனே அது அறுக்கப்பபடும் அதன் பின் அழைப்பாளர் சுவர்க்கவாதிகளே! உங்களுக்கு மரணம் என்பது கிடையாது நிரந்தரமாக தங்கிவிடுங்கள் என்றும், நரகவாதிகளைப்பார்த்து உங்களுக்கு மரணம் என்பது கிடையாது நீங்களும் உங்கள் இடத்தில் நிரந்தரமாக தங்கி விடுங்கள் என்று கூறுவார். முஃமின்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்கும் காபிர்களை கண்டிக்க வேண்டும் என்பதற்காகவுமே இவ்வாறு கூறப்படும். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதினார்கள்: (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்) ஆக, மறுமை நாளில் சுவர்க்கவாதிகள் நரகவாதிகள் என வேறுபடுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுக்குரிய இடத்திற்கு சென்று நிரந்தரமாக இருந்து விடுவர். தீமை செய்தவன் தான் நல்லது செய்யவில்லை என வருந்தியும், அலட்சியத்துடன் கவனக்குறைவாக இருந்தவன் நல்லனவற்றை அதிகமாகச் செய்யவில்லை எனவும் புலம்புவான்.

فوائد الحديث

மறுமையில் மனிதனின் இறுதி நிலை சுவர்க்கத்தில் அல்லது நரகத்தில் நிரந்தரமாக தங்குவதாகும்.

மறுமையின் அமளிதுமளிகள் குறித்து கடுமையாக எச்சரித்தல். ஏனெனில் அது சோகமும் கைசேதமும் நிறைந்த நாளாகும்.

சுவர்க்கவாதிகள் நிரந்தர மகிழ்ச்சியுடனும் நரகவாதிகள் நிரந்தர சோகத்துடனும் இருப்பது குறித்து தெளிவுபடுத்தியிருத்தல்.

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், சுவனம் மற்றும் நரகின் தன்மைகள், வசனங்களின் விரிவுரை