இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்

20- யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும். துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக

23- 'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்