'தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக…

'தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக மோசமானவர்கள்'

நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக மோசமானவர்கள்'.

[ஹஸனானது-சிறந்தது] [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத்தளங்களாக எடுத்து அதன் பால் தொழுவோருமே மக்களில் மிக மோசமானவர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

فوائد الحديث

சமாதிகளின் மீது பள்ளிகளைக் கட்டுவது இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் வழி என்பதனால் அதன் மீது கட்டுவது ஹராமாக்கப்பட்டிருத்தல்.

சமாதிகளை கட்டியோ கட்டாமலோ அங்கு தொழுவது ஹராமாகும், ஏனெனில் கட்டடம் இல்லாவிடினும் ஸுஜுது செய்யப்படும் அனைத்து இடங்களும் பள்ளியாகும்; மஸ்ஜித் என்பது, கட்டடம் இல்லாதிருந்தாலும் ஸுஜூத் செய்யப்படும் இடங்களுக்கு வழங்கப்படும் ஒரு பெயராகும்.

நல்லடியார்களின் சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்பவர்கள் மக்களில் தீயவர்களாவர், அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அவர்கள் நாடினாலும் சரியே.

التصنيفات

மறுமையின் அடையாளங்கள்