إعدادات العرض
நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள்
நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கும் மத்தியில் வானம் மற்றும் பூமிக்கு மத்தியில் உள்ளது போன்று இடைவெளி இருக்கும். பிர்தவ்ஸ் தான் உயர்ந்த படித்தரத்தில் உள்ளதாகும். அதற்கு மேலிருந்து தான், சுவனத்தின் நான்கு ஆறுகளும் ஊற்றெடுக்கச் செய்யப்படுகின்றன. அதற்கு மேலால் தான் அர்ஷ் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள்.
الترجمة
العربية Tiếng Việt অসমীয়া Nederlands Indonesia Kiswahili Hausa සිංහල English ગુજરાતી Magyar ქართული Română Русский Português ไทย తెలుగు मराठी دری Türkçe አማርኛ বাংলা Kurdî Malagasy Македонски Tagalog ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ پښتو Moore Wolof മലയാളം Svenska Bosanskiالشرح
இங்கு நபிவர்கள் அறிவிப்பதாவது, மறுமையில் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கும் மத்தியில் உள்ள தூரம் வானம் மற்றும் பூமிக்கு மத்தியில் உள்ளது போன்று இடைவெளி இருக்கும். பிர்தவ்ஸ் தான் உயர்ந்த படித்தரத்தில் உள்ளதாகும். அதற்கு மேலிருந்து தான், சுவனத்தின் நான்கு ஆறுகளும் ஊற்றெடுக்கச் செய்யப்படுகின்றன. பிர்தவ்ஸுக்கு மேலால் தான் அர்ஷ் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள். ஏனெனில், அதுவே அனைத்து சுவனங்களுக்கும் மேலால் உள்ளது.فوائد الحديث
சுவனவாதிகள் தமது ஈமான் மற்றும் நல் அமல்களுக்கு ஏற்ப, தமது அந்தஸ்த்துக்களிலும் வேறுபடுவார்கள்.
சுவனத்தின் மிக உயர்வான, பிர்தவ்ஸை அல்லாஹ்விடம் கேட்கத் தூண்டுதல்.
பிர்தவ்ஸே சுவனத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும், மிகச் சிறந்த சுவனமாகும்.
ஒரு முஸ்லிமுடைய மனவுறுதி உயர்ந்ததாக இருப்பதும், அவன் அல்லாஹ்விடத்தில், மிகச் சிறந்த, உயர்வான அந்தஸ்த்துக்களையே வேண்டுவதும் அவசியமாகும்.
சுவனத்தின் நான்கு ஆறுகள் என்பது, நீர், பால், மது மற்றும் தேன் ஆகிய ஆறுகளாகும். பின்வரும் வசனத்தில் குறிக்கப்படுவது அவையே: 'பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன;' (ஸூரா முஹம்மத் : 15)
