ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்

3- என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்

8- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!