إعدادات العرض
அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்'…
அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள்
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய எனக்கு ஏதாவது கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்;' என்று கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் கேட்க ஏதாவது ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: 'அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Hausa മലയാളം Kurdî অসমীয়া Kiswahili Tiếng Việt ગુજરાતી Nederlands සිංහල پښتو नेपाली Кыргызча Svenska Română తెలుగు ქართული Moore Српски Magyar Português Македонски Čeština Українська Azərbaycan Malagasy Kinyarwanda Wolof ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ ភាសាខ្មែរ Lietuvių ಕನ್ನಡ Oromoo Deutsch Shqipالشرح
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தந்தைவழிச் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பிரார்த்தனையை தனக்குக் கற்றுக் கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'மார்க்க விடயங்களிலும் இம்மை மற்றும் மறுமையிலும் எல்லா வகையான கஷ்டங்களிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தையும்; பாதுகாப்பையும் கேளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று எனக்கு ஒரு பிரார்ததனையைக் கற்றுக் கொடுக்கச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரழி) அவர்களின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தி, ' அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே!' என்று கூறி, பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை (ஆஃபியத்) கேளுங்கள், அதனால் அவன் உங்களை எல்லா கஷ்டங்களிலிருந்தும் பாதுகாத்து, இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு எல்லா வகையான நன்மைகளையும் வழங்குவான்.فوائد الحديث
நபி (ஸல்) அவர்கள் அதே பதிலை அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இரண்டாவது முறையாகக் கூறியது, அல்லாஹ்விடம் கேட்கக்கூடிய சிறந்த விஷயம் நல்ல ஆரோக்கியம் என்பதைக் காட்டுகிறது.
ஆரோக்கியத்தின் சிறப்பு. இது இவ்வுலகிலும் மறுவுலகிலும் உள்ள அனைத்து நன்மைகளையும் ஒன்றிணைக்கும் விடயமாகும்.
நபித்தோழர்கள் தங்கள் அறிவையும் நல்ல விடயங்களையும் அதிகரித்துக்கொள்வதில் கொண்டிருந்த ஆர்வமும் முயற்சியும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.
