யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். தீமைகளில்,…

யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன்

நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்ததாக, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன். யா அல்லாஹ்! உனது அடியாராகிய உனது நபி உன்னிடம் கேட்டவற்றில் சிறந்தவற்றை நான் உன்னிடம் கேட்கின்றேன். உனது அடியாராகிய உனது நபி உன்னிடம் பாதுகாப்புக் கேட்டவற்றில் தீயவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன். யா அல்லாஹ்! நான் உன்னிடம் சுவர்க்கத்தையும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது செயற்களையும் கேட்கின்றேன். மேலும் நான் உன்னிடம் நரகத்தை விட்டும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது செயற்களை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றேன். மேலும் என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் நன்மையானதாக ஆக்கிவிடுமாறும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

[ஸஹீஹானது-சரியானது] [رواه ابن ماجه وأحمد]

الشرح

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கருத்துச் செரிவுமிக்க ஒரு துஆவைக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அது நான்கு துஆக்களை உள்ளடக்கியுள்ளது : முதலாவது : அனைத்து நன்மைகளையும் உள்ளடக்கியது: யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான (அப்போது கிடைக்கக்கூடிய,) தாமதமான (தூரமான,) (நீ கற்றுக்கொடுத்து) நான் அறிந்த, (தூய்மையான உன்னுடைய அறிவில் மாத்திரம் உள்ள) நான் அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். இங்கு இவ்விடயம், அனைத்தையும் அறிந்த, அறிவுமிக்க, நுட்பமான அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டப்படுகின்றது. எனவே அல்லாஹ், ஒரு முஸ்லிமுக்கு அதில் மிகச் சிறந்ததையும், அழகானதையும் தெரிவு செய்து கொடுப்பான். 'தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்(டு ஒதுங்கிக் கொள்)கின்றேன்.' இரண்டாவது பிரார்த்தனை : இது முஸ்லிம்களை பிரார்த்தனையில் வரம்பு மீறுவதிலிருந்து பாதுகாக்கிறது. யா அல்லாஹ்! உனது அடியாராகிய உனது நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள்) உன்னிடம் கேட்டவற்றில் சிறந்தவற்றை நான் உன்னிடம் கேட்(டு வேண்டிக் கொள்)கின்றேன். உனது அடியாராகிய உனது நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள்) உன்னிடம் பாதுகாப்புக் கேட்டவற்றில் தீயவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கேட்(டு ஒதுங்கிக் கொள்)கின்றேன். இங்கு நபியவர்கள் எவற்றைக் கேட்டார்கள் என வரையறுத்துக் கூறாமல், பொதுவாக, அவர்கள் தமக்காக எதையெல்லாம் கேட்டார்களோ அவற்றைத் தருமாறு பிரார்த்தித்து வேண்டுவதாகும். மூன்றாவது : சுவனத்தில் நுழையவும், நரகை விட்டுத் தூரமாகவும் பிரார்த்தித்து வேண்டுவதாகும். அதுதான் ஒவ்வொரு முஸ்லிமினதும் தேவையும், அவனது அமல்களின் நோக்கமுமாகும். 'யா அல்லாஹ்! நான் உன்னிடம் சுவர்க்கத்தை (அடைந்து கொள்வதை)யும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது (உன்னைத் திருப்திப்படுத்தும் நல்ல) செயற்களையும், கேட்கின்றேன். மேலும் நான் உன்னிடம் நரகத்தை விட்டும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது (உன்னைக் கோபப்படுத்தும் பாவச்) செயற்களை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றேன். (ஏனெனில், உனது அன்பைக் கொண்டு மாத்திரமே கெட்ட செயற்களில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும்)' நான்காவது துஆ : அல்லாஹ்வின் விதியில் திருப்தியைத் தருமாறு துஆக் கேட்டல். 'என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் நன்மையானதாக ஆக்கிவிடுமாறும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.' (அதாவது அல்லாஹ் என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் எனக்கு நன்மையைத் தருபவையாக ஆக்கி விடுமாறு நான் கேட்கின்றேன்) இது, அல்லாஹ்வின் விதியைத் திருப்தியோடு ஏற்றுக் கொள்ளவைக்குமாறு கேட்கும் துஆவாகும்.

فوائد الحديث

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து போன்று, ஒவ்வொரு மனிதனும் தனது குடும்பத்திற்கு அவசியமான மார்க்க, உலக விவகாரங்களைக் கற்றுக்கொடுப்பது அவசியமாகும்.

ஒரு முஸ்லிம், நபியவர்கள் ஊடாக வந்த துஆக்களை மனனமிட்டுக்கொள்வதே சிறந்ததாகும். ஏனெனில் அவை கருத்துச் செரிவுமிக்க துஆக்களாகும்.

இந்த ஹதீஸைப் பற்றி உலமாக்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நலவுகளைக் கேட்டல், தீமைகளை விட்டுப் பாதுகாப்புத் தேடல் ஆகியவற்றிற்காக வந்துள்ள துஆக்களில் இது அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு துஆவாகும். இது நபியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'ஜவாமிஉல் கலிம்' (குறைவான சொற்களில் நிறைவான அர்த்தங்கள் அடங்குமாறு பேசுதல்) வசனங்களில் ஒன்றாகும்.

அல்லாஹ்வுடைய அருளுக்குப் பின்னர், சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு காரணியாக, நல் அமல்களும் நல்ல வார்த்தைகளும் காணப்படுகின்றன.

التصنيفات

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்