என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும்,…

என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்

அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை ஓதுவார்கள் : என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபியவர்களின் கருத்தாழமிக்க துஆக்களில் பின்வரும் துஆவும் ஒன்றாகும்: என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும் (பாவங்களையும்) அறியாமையையும் (நான் அறியாமல் நடந்தவற்றையும்) மன்னித்துவிடுவாயாக! எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும் (எனது பொடுபோக்குகளையும், நான் அளவு கடந்ததையும்) என்னை விட நீ அறிந்துவைத்திருப்பவற்றையும் (நீ அவற்றை அறிந்து வைத்துள்ளாய், நானோ அவற்றை மறந்துள்ளேன்) மன்னித்துவிடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், (நான் பாவம் என அறிந்துகொண்டே செய்தவற்றையும்) எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் (பரிகாசமாக நான் செய்தவற்றையும், இவ்விரு நிலைகளிலும் என்னிடமிருந்து வெளிப்பட்ட அனைத்தையும்) மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. (மேற்கூறிய குறைகள், பாவங்கள் அனைத்துமே என்னிடம் உள்ளன.) யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள் (கடந்த காலத்தில் செய்தவைகள்) பிற்படுத்தியவைகள் (பின்னர் செய்யப்போகும் பாவங்கள்) மறைத்துக்கொண்டவைகள் (இரகசியமாகச் செய்தவைகள்) பகிரங்கப்படுத்தியவைகள் (பகிரங்கமாகச் செய்தவைகள்) என அனைத்தையுமே மன்னித்து விடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! (நீ நாடியோரை உனது அருளை நோக்கி முற்படுத்தி, உனக்குப் பொருத்தமானவற்றைச் செய்ய அவர்களுக்கு அருள் புரிகின்றாய். நீ நாடியவர்களுக்கு உதவி புரியாமல், கைவிட்டுப் பிற்படுத்துகின்றாய். எனவே, நீ பிற்படுத்துபவற்றை யாராலும், முற்படுத்தவோ, நீ முற்படுத்தும் விடயங்களை யாராலும் பிற்படுத்தவோ முடியாது.) நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன். (முழுமையான சக்தியும், பூரணமான நாட்டமும் கொண்டவன். நீ நாடிய அனைத்தையும் நீ செய்வாய்!)

فوائد الحديث

இந்த துஆவின் சிறப்பு. மற்றும் நபியவர்களைப் பின்பற்றி இந்த துஆவைப் பேணி ஓதிவருதல்.

வீண் விரயத்தைத் தடுத்தல். மேலும், வீண்விரயம் செய்பவன் தண்டனைக்குட்படுத்தப்படுபவன் என்பதையும் உணர்த்தல்.

ஒரு மனிதனைப் பற்றி, அவனை விட அல்லாஹ்வே அறிந்துவைத்துள்ளான். எனவே, அவன் தனது விவகாரங்களை அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது அவசியமாகும். ஏனெனில், அவன் அறியமாலேயே அவன் தவறு விடலாம்.

ஒரு மனிதன் வேண்டுமென்று செய்வதற்குக் குற்றம் பிடிக்கப்படுவது போன்று, பரிகாசமாக செய்பவற்றிற்கும் சிலவேளை குற்றம் பிடிக்கப்படுவான். எனவே, மனிதன் தனது பரிகாசங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸின் எந்த அறிவிப்புக்களிலும் இது ஓதப்படும் இடம் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணவில்லை. இதன் இறுதிப் பகுதியின் பெரும்பாலான வசனங்களை நபியவர்கள் இரவுத் தொழுகையில் ஓதியதாக வந்துள்ளது. தொழுகையின் இறுதியில் ஓதியுள்ளதாகவும் வந்துள்ளது. ஸலாம் கொடுப்பதற்கு முன்னரா? அல்லது பின்னரா ஓதினார்கள் என்பதில் அறிவிப்புக்கள் வேறுபட்டு வந்துள்ளன.

நபியவர்கள் பாவமன்னிப்புக் கேட்கிறார்கள் என்றால், அவர்கள் தவறிழைத்துள்ளார்களா? அவர்கள் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும், பணிவுக்காகவும் அவ்வாறு கூறியிருக்கலாம் என்று ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது. அல்லது பரிபூரணமும், மிக ஏற்றமானதும் தப்பிப் போவதை அவர்கள் பாவமாகப் பார்த்திருக்கலாம். அல்லது மறதியாக நடந்த தவறுகளை நாடியிருக்கலாம். அல்லது நுபுவ்வத்திற்கு முன்னர் நடந்தவையாக இருக்கலாம். இஸ்திக்பார் என்பது ஒரு வணக்கம், எனவே, பாவமன்னிப்புக் கேட்டல் என்ற நோக்கம் மாத்திரமல்லாமல், தனி ஒரு வணக்கமாகவும் அது செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்லது, நபியவர்களது சமுதாயம், பயமின்றி, இஸ்திக்பாரை விட்டுவிடக் கூடாது என்பதற்கான ஒரு அறிவூட்டலாகவும், விழிப்பூட்டலாகவும் இது உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

التصنيفات

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்