யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென…

யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பவர்களாக இருந்துள்ளார்கள் : யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபியவர்கள் நான்கு விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றார்கள் : முதலாவது : யா அல்லாஹ்! உனது (உலக, மார்க்க) அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், (மேலும், இஸ்லாத்தில் நான் நிலையாக இருக்கவும், அருட்கொடைகளை இல்லாதொழிக்கும் பாவங்களில் வீழ்ந்துவிடாமல் தூரமாக இருக்கவும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இரண்டாவது : 'உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும்,' (அதாவது, அது சோதனையாக மாறிவிடுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னிடம் நிரந்தரமான பாதுகாப்பையும், வலிகள் மற்றும் நோய்களை விட்டுப் பாதுகாப்பையும் கேட்கின்றேன். மூன்றாவது : உனது தண்டனைகள் (சோதனைகளாகத்) திடீரென வருவதை விட்டும். சோதனைகளும் தண்டனைகளும் திடீரென வந்து விட்டால், தவ்பா செய்து சரிசெய்து கொள்வதற்கான ஒரு காலம் இருக்காது. அதனால் வரும் சோதனை மிக மோசமானதாக இருக்கும். நான்காவது : 'உனது அனைத்துக் கோபங்களை விட்டும்' (மேலும், உனது கோபத்தை ஏற்படுத்தும் காரணிகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.) நீ யார் மீது கோபம் கொள்கின்றாயோ, அவர் தோற்று, நட்டப்பட்டு விடுவான். இங்கு நபியவர்கள் பன்மையைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டுவரக் காரணம், அல்லாஹ்வின் கோபத்திற்குக் காரணமாக அமையும், அனைத்து, சொற்கள், செயற்கள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கிக் கொள்ளுவதற்காகும்.

فوائد الحديث

நபியவர்கள் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவராக இருக்கின்றமை.

பரக்கத்திற்குரிய இந்த துஆ, அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த அருள்புரிவதையும், பாவங்களில் வீழ்ந்துவிடாமல் பாதுகாப்பதையும் உள்ளடக்கியுள்ளது. ஏனெனில் அவையே அருட்கொடைகளை இல்லாமல் செய்கின்றன.

அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தும் இடங்களை விட்டு மிகக் கவனமாக விலகியிருத்தல்.

அல்லாஹ்வின் தண்டனை திடீரென வருவதை விட்டும் நபியவர்கள் பாதுகாப்புக் கேட்டுள்ளார்கள். ஏனெனில், அல்லாஹ் ஒரு அடியானைத் தண்டித்து விட்டான் என்றால், அவனால் தடுத்து நிறுத்த முடியாத ஒரு சோதனையை அவனுக்க இறக்கி விடுவான். ஏனைய எல்லாப் படைப்புக்களும் ஒன்று சேர்ந்தாலும், அவர்களால் அதைத் தடுத்த நிறுத்த முடியாது.

இங்கு நபியவர்கள் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு மாறி விடுவதை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றார்கள். ஏனெனில், அல்லாஹ் ஒருவருக்கு தன்னுடைய பாதுகாப்பை வழங்கிவிட்டான் என்றால், ஈருலக நலவுகளையும் அவன் அடைந்து கொள்வான். அது அவனை விட்டும் தப்பிச் சென்று விட்டால், ஈருலக தீமைகளையும் அவனைத் தொற்றிக் கொள்ளும். ஆபியா எனும் இறைப்பாதுகாப்பிலேயே ஈருலக சீரான வாழ்வு உள்ளது.

التصنيفات

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்