اللهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ، لَا إِلَهَ…

اللهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ». (பொருள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப் பட்டு விட்டேன்! உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். உன்னிடமே மீளுகின்றேன். உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. என்னை நெறிபிரழச் செய்யாமல் இருக்குமாறு, உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு கேட்கின்றேன். மரணிக்காத நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே! )

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள் என, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : «اللهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ». (பொருள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப் பட்டு விட்டேன்! உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். உன்னிடமே மீளுகின்றேன். உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. என்னை நெறிபிரழச் செய்யாமல் இருக்குமாறு, உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு கேட்கின்றேன். மரணிக்காத நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே! ).

[சரியானது] [இமாம்களான புஹாரி, முஸ்லிம் இருவரும் இதை பதிவு செய்துள்ளனர். இந்த வாசகம் முஸ்லிமுக்குரியது, புஹாரி இதனை சுருக்கமாக அறிவித்துள்ளார்]

الشرح

நபியவர்கள் தமது துஆவில் இவ்வாறு கூறுவார்கள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப்பட்டுவிட்டேன்! (வழிப்பட்டுவிட்டேன்) உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். (உன்னை உண்மைப்படுத்தி, ஏற்றுக் கொள்கின்றேன்) உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். (உன்னை நம்பி இருக்கின்றேன்) உன்னிடமே மீளுகின்றேன். (உன்னை நோக்கியே மீண்டு வருகின்றேன்) உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். (உனது எதிரிகளுடன் விவாதிக்கின்றேன்) யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவர்கள் உன்னைத் தவிர யாரும் இல்லை) என்னை (நேர்வழி மற்றும் உனது திருப்தியைப் பெரும் பாக்கியம் ஆகியவற்றை விட்டும்) நெறிபிரழச் செய்வதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு (அதாவது உனது பலத்தைக் கொண்டு) பாதுகாப்புக் கேட்கின்றேன். (உன்னிடமே ஒதுங்குகின்றேன்) மரணிக்காத (அழிந்து போகாத) நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே!.

فوائد الحديث

தேவைகளின் போது, அவற்றைக் கேட்க முன்னர் அல்லாஹ்வைப் புகழ்வது விரும்பத்தக்கது.

அல்லாஹ்வின் மீது மாத்திரம் பெறுப்புச் சாட்டுவதும், அவனிமே பாதுகாப்பு வேண்டுவதும் கட்டாயமாகும். ஏனெனில், அவனே பரிபூரணத் தன்மைகளைக் கொண்டவன். அவன் மீது மாத்திரமே நம்பிக்கை வைக்க முடியும். படைப்பினங்கள் அனைவருமே இயலாதவர்களே. அவர்கள் மரணிக்க இருப்பவர்கள். எனவே, அவர்கள் நம்பிக்கை வைக்கப்படப் பொறுத்தமானவர்கள் அல்ல.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, உண்மையான ஈமானையும், ஆழமான மனவுறுதியையும் பறைசாற்றும் இந்த கருத்தாழம்மிக்க துஆவை ஓதுதல்.

ஸின்தி அவர்கள் கூறுகின்றார்கள் : 'நீயே நித்திய ஜீவன்' என்பதன் அர்த்தமாவது, 'பாதுகாப்புத் தேடப் பொருத்தமானவன் நீயே, வேறு யாருமல்ல' என்பதாகும்.

التصنيفات

திக்ரில் நபியவர்களின் வழிகாட்டல், ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்