ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்)…

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக'

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக' என அதிகம் கூறுபவர்களாக இருந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாம் உம்மையும் நீங்கள் கொண்டுவந்தவற்றையும் விசுவாசம் கொண்டுள்ளோம். அவ்வாறிருந்தும் எம்மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள், ஆம் என்று கூறிவிட்டு, 'நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' என பதிலளித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [رواه الترمذي وأحمد]

الشرح

நபியவர்கள் அதிகம் தனது பிரார்த்தனையில், மார்க்கத்திலும், வணக்க வழிபாட்டிலும் ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் அல்லாஹ்விடம் வேண்டுபவர்களாகவும், தடம் புரள்தல் மற்றும் வழிகேடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும் கோருபவர்களாகவும் இருந்தார்கள். இந்த துஆவை நபியவர்கள் அதிகம் ஓதுவதைக் பார்த்து அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது நபியவர்கள் அவரிடத்தில் 'உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' எனக் கூறினார்கள். உள்ளமானது இறைவிசுவாசம் மற்றும் இறைநிராகரிப்பின் உரைவிடமாகும். உள்ளமானது ஒரே நிலையில் இல்லாது அடிக்கடி நிலைமாறுவதினால் அரபியில் கல்ப் என அழைப்பர். அது மாத்திரமின்றி அதிக வெப்பத்தில் கொதிக்கும் பானையில் உள்ள தண்ணீரை விடவும் உள்ளமானது கொந்தளிக்கக் கூடியது. எனவே யாருக்கு அல்லாஹ் உறுதியை நாடுகிறானோ அவனது உள்ளத்தை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்யவும், மார்க்கத்தில் உறுதியாக இருக்கும் வாய்ப்பையும் வழங்குகிறான். யாரை அல்லாஹ் நேர்வழியிலிருந்து திருப்ப நாடுகிறானோ அவனை தடம்புரளல் மற்றும் வழிகேட்டின் பால் விட்டுவிடுகிறான்.

فوائد الحديث

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, பணிவுடன் நடந்து கொண்டு, அவனிடம் மன்றாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆகவே இஸ்லாமிய உம்மத்தும் இதே பிரார்த்தனையைச் செய்யுமாறு இந்த ஹதீஸில் வழிகாட்டப்பட்டுள்ளமை.

மார்க்கத்தின் மீது பற்றும் உறுதியும் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு எல்லா விவகாரமும் இறுதி முடிவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதையும் இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகிறது.

ஒர் அடியான எப்போதும் இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படுகிறது.

நபியின் முன்மாதிரியைப் பின்பற்றி, இந்த துஆவை அதிகம் ஓதுமாறு வலியுறுத்தப்பட்டிருத்தல்.

இஸ்லாத்தில் உறுதியாக இருத்தல் என்பது இறைவனின் மிகப்பெரும் அருட்கொடையாகும், அதற்காக அடியான் தனது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

التصنيفات

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள், உளச் செயற்பாடுகள்