நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அதிகமாக சொற்சுருக்கமும் பொருட்செறிவும் மிக்க துஆக்களை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அவற்றுள் ஒரு துஆ பின்வருமாறு : ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக! இங்கு குறிப்பிடப்பட்ட உலகின் நலனை என்பது விசாலமான இன்பத்தை தரவல்ல ஹலாலான வாழ்வாதரம்,நல்ல –ஸாலிஹான மனைவி -கண்குளிச்சி மிக்க பிள்ளைகள் -ஓய்வு- நல்ல அமல் -செயல்பாடு போன்ற அனுமதிக்கப்பட்டதும் விரும்பத்தக்கதுமான கோரிக்கைகளைக் உள்ளடக்கியுள்ளது.மறுமை நலன் என்பது கப்ரிலும் இறைசன்னிதானத்திலும் நரகிலும் கிடைக்கவிருக்கும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்ப் பெறுதல்,இறைபொறுத்தத்தைத் பெறல்,நித்தியமான பேரின்பத்தை அடைந்து கொள்ளுதல்,கருணையாளனாகிய அல்லாஹ்விடம நெருக்கத்தைப் பெறுதல் போன்றவற்றைக் குறிக்கும்.

فوائد الحديث

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை முன்பமாதிரியாகக் கொண்டு அவர்கள் ஓதிய கருத்தாளமிக்க துஆக்களை ஓதுவது வரவேற்கத்தக்கது.

ஒருவர் தனது பிரார்த்தனையில் இம்மை மறுமை நலன்ககள் இரண்டையும் சேர்த்து பிரார்த்திப்பது அவரின் துஆ –பிரார்த்தனை –மிகவும் பூரணத்துவமிக்கதாக அமைய காரணமாக அமையும்.

التصنيفات

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்