யா தல் ஜலாலி வல் இக்ராம் என்ற வார்த்தையையைப் பற்றிக் கொள்ளுங்கள்."

யா தல் ஜலாலி வல் இக்ராம் என்ற வார்த்தையையைப் பற்றிக் கொள்ளுங்கள்."

யா தல் ஜலாலி வல் இக்ராம் (வல்லமையும்கண்ணியமும் மிக்கவனே) என்ற வார்த்தையையைப் பற்றிக் கொள்ளுங்கள்."என நபி (ஸல்)அவர்கள் கூறியாத அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸில் ஒரு கட்டளை உள்ளது. அதுதான் (அலில்லு எனும் வார்த்தை. அதன் பொருள் இந்தப் பிரார்த்தனையை பற்றிக்கொள்ளுங்கள் அதிகமாகச் சொல்லுங்கள். அதன் கருத்தாவது எப்போதும் இவ்வார்த்தைகளை உங்களுடையை பிரார்த்தனையில் கூறுவதுடன் உங்களின் நாவுகளிலும் தவழச் செய்யுங்கள். இப்பிரார்த்தனையானது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றை உள்ளடக்கியுள்ளது அல் இஸ்முல் அஃலம் எனும்அல்லாஹ்வின் உயர் நாமத்தை உள்ளடக்கியுள்ளதாக ஒரு கருத்து உள்ளது. காரணம் யாதெனில் அல்லாஹ்வின் அனைத்து ருபூபிய்யத் உலூஹியத் எனும் பண்புகளை இது உள்ளடக்கியுள்ளது என்பதினாலாகும்.

التصنيفات

திக்ரில் நபியவர்களின் வழிகாட்டல், ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்