யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது

யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது. எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது வாழ்ப்பு உள்ளது. எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது. இந்த வாழ்க்கையை எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு. மரணத்தை எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபியவர்கள் எந்த நற்குணங்களைப் பரிபூரணப்படுத்த அனுப்பப்பட்டார்களோ, அவற்றின் அடிப்படைகளான, மார்க்கம் சீராக இருத்தல், மேலும், உலகம் மற்றும் மறுமை சீராக இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும் விதமான ஒரு துஆவைக் கேட்கின்றார்கள். இந்த சுருக்கமான வாசகம், இம்மூன்று அம்சங்களும் சீராக இருப்பதை வேண்டுவதை உள்ளடக்கியுள்ளது. முதலில் மார்க்கம் சீராக இருப்பதைக் கேட்கின்றார்கள். அதைக் கொண்டுதான் ஈருலக வாழ்வும் சீராக இருக்கப் போகின்றது : (யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை சீராக்கித் தருவாயாக!) அதாவது, அதன் ஒழுக்கங்களை முழுமையான, பரிபூரண விதத்தில் நிறைவேற்ற எனக்கு அருள் புரிவாயாக! (அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது) அது எனது அனைத்து விடயங்களையும் பாதுகாக்கக் கூடியது. எனவே, எனது மார்க்கம் சீர்க்கெட்டுவிட்டால், எனது எல்லா விவகாரங்களும் சீர்க்கெட்டுவிடும். நான் நட்டமடைந்து, தோற்றுவிடுவேன். மார்க்கம் எதிர்பார்க்கப்படும் விதத்தில் சீராக இருப்பதென்பது, உலகம் சீராக இருப்பதனாலே முழுமை பெறும் என்பதனால், பின்வருமாறு கூறினார்கள் : (எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக!) அதாவது, எனக்கு உடல் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும், நல்ல மனைவியையும், நல்ல பிச்சலத்தையும், மேலும் எனக்குத் தேவையானவற்றையும் தருவதன் மூலம். அவை ஹலாலானதாகவும், உன்னை வழிப்படுவதற்கு உதவிசெய்யக்கூடியவையாகவும் இருக்கவேண்டும். பின்பு, அதை சீர்செய்து தருமாறு கேட்பதில் உள்ள நியாயத்தைக் கூறுகின்றார்கள் : (அதில் தான் எனது வசிப்பு உள்ளது) அதாவது, நான் வாழும் இடம், எனது வாழ்நாட்கள். (எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது.) அதாவது, உன்னை சந்திப்பதற்காக நான் மீள்வது. அதாவது, எனது அமல்கள் சீராக இருக்கவேண்டும். வணக்கவழிபாடுகள், உளத்தூய்மை மற்றும் நல்ல இறுதிமுடிவு என்பவற்றிற்கு அல்லாஹ் அடியானுக்கு அருள் புரியவேண்டும். நபியவர்கள் உலகிற்குப் பின்னர் மறுமையைக் கூறியிருப்பதற்கான காரணம், முதலாவதுதான், இரண்டாவது சீராக இருப்பதற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்றது. இவ்வுலகில் யார், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப சீராக இருக்கின்றாரோ, அவரது மறுமை சீராக அமைந்துவிடும். அவர் சுபீட்சத்துடன் இருப்பார். (இந்த வாழ்க்கையை) மேலும், நீண்ட வாழ்நாளையும் (எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு.) நான் நல் அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். (மரணத்தை) அதை அவசரமாகத் தருவதை (எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு) அதாவது, சோதனைகள், குழப்பங்கள், மேலும், பாவங்களையும், பராமுகத்தையும் கொண்டு சோதிக்கப்படுதல் என்பவற்றில் இருந்தும் மேலும், உலக சிரமங்களில் இருந்தும், அதன் தெளிவற்ற நிலையில் இருந்தும்,

فوائد الحديث

மார்க்கம் தான் மிகப் பிரதானமானது. அதனால்தான் நபியவர்கள் துஆவில் முதலில் அதனைக் கேட்டுள்ளார்கள்.

மார்க்கம் என்பது மனிதனுக்கு ஒரு பாதுகாப்பாகும். அனைத்துத் தீமைகளையும் விட்டு அவனை அது பாதுகாக்கின்றது.

மார்க்கமும், மறுமையும் சீராக இருப்பதற்காக வேண்டி, உலக விவகாரங்களையும் துஆக்களில் கேட்டல்.

மார்க்கத்தில் குழப்பம் வந்துவிடும் என்ற பயத்திலோ, இறைபாதையில் உயிர்நீப்பதை அல்லாஹ்விடம் கேட்கும் அடிப்படையிலோ, மௌத்தை ஆசைப்படுவது வெறுக்கப்படமாட்டாது.

التصنيفات

ஆதாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்கள்