கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்லது அவனுக்கு விட்டுக் கொடுப்பவனுக்கு, அல்லாஹ்வின் அர்ஷின்…

கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்லது அவனுக்கு விட்டுக் கொடுப்பவனுக்கு, அல்லாஹ்வின் அர்ஷின் நிழலன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளிலே, தன் அர்ஷின் நிழலின் கீழ் அல்லாஹ் நிழல் அளிப்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் :"கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்லது அவனுக்கு விட்டுக் கொடுப்பவனுக்கு, அல்லாஹ்வின் அர்ஷின் நிழலன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளிலே, தன் அர்ஷின் நிழலின் கீழ் அல்லாஹ் நிழல் அளிப்பான்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

“கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவன்” என்பது கடன்பட்ட ஏழைக்கு தவணை வழங்குவதாகும். “அவனுக்கு விட்டுக் கொடுப்பவன்” என்பது தரவுள்ள கடனை தள்ளுபடி செய்பவனாகும். அபூநஈமின் அறிவிப்பின் பிரகாரம் "அவனுக்கு சன்மானமாக வழங்குவதாகும்". எனவே அதற்குரிய சன்மானம் அல்லாஹ் அவனது அர்ஷின் கீழால் நிழலளித்து அவனுக்கு சுவனப் பிரவேசமும் கொடுத்து மறுமையின் உஷ்ணத்திலிருந்து அவனை பாதுகாப்பதுமாகும். இந்தக் கூலியை அதாவது, அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் உள்ள நிழலை தனக்கு வரவுள்ள தனது கடனாளிக்கு தவணை கொடுத்து விடுகிறவன், அந்தக் கடன் சுமையிலிருந்து விடுவிப்பவன் ஆகியோருக்காகும். அந்த வேலைக்குரிய கூலியாக அல்லாஹ் அவனுக்கு நிம்மதி அளித்தான்.

فوائد الحديث

அழகிய கடன் கொடுப்பதும், கடன் பெற்றவுடன் மென்மையாக, தயவாக நடப்பதும் விரும்பத்தக்கதாகும்.

கடனாளிக்குத் தவணை அளிப்பது, அல்லது கடனை முழுவதுமாகவோ, பகுதியாகவோ தள்ளுபடி செய்வது எந்தவொரு நிழலும் இல்லாத மறுமையில் அல்லாஹ்வின் நிழலைப் பெற்றுத்தரும் விடயங்களில் உள்ளதாகும்.

தாராளத் தன்மையுடன் நடக்கும் கடன் கொடுப்பவரின் சிறப்பும், மறுமையில் அவர் பெறும் பாரிய கூலி பற்றியும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் அடியார்களுக்கு இலகுபடுத்திக் கொடுப்பதன் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடன் பரிவர்த்தனைக்கு அனுமதியுண்டு.

பொறுப்புச் சாட்டியவரின் அனுமதியுடன் பொறுப்பாளி தர்மம் செய்வது செல்லுபடியாகும்.

التصنيفات

மறுமை வாழ்வு, மறுமை வாழ்வு