''எனது சமூகத்தின் இறுதியில் சில நபர்கள் தோன்றுவார்கள் அவர்கள் நீங்களோ உங்களின் மூதாதையர்களோ செவிமடுக்காத…

''எனது சமூகத்தின் இறுதியில் சில நபர்கள் தோன்றுவார்கள் அவர்கள் நீங்களோ உங்களின் மூதாதையர்களோ செவிமடுக்காத விடயங்களை (மார்க்கத்தின் பெயரால்) கூறுவார்கள். எனவே உங்களையும் அவர்களையும் நான் எச்சரிக்கிறேன்''

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''எனது சமூகத்தின் இறுதியில் சில நபர்கள் தோன்றுவார்கள் அவர்கள் நீங்களோ உங்களின் மூதாதையர்களோ செவிமடுக்காத விடயங்களை (மார்க்கத்தின் பெயரால்) கூறுவார்கள். எனவே உங்களையும் அவர்களையும் நான் எச்சரிக்கிறேன்''.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

தனது உம்மத்தின் இறுதிக்காலத்தில் சில நபர்கள் தோன்றி தங்களுக்கு முன்னர் யாருமே கூறாத விடயங்களை மார்க்கத்தின் பெயரில் பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுவார்கள் என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது அவர்கள் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை கூறுவார்கள், இந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எமக்கு அவர்களின் அவையில் ஒன்றாக இருப்பதை விட்டும் விலகி இருக்குமாறும், அவர்களின் ஹதீஸ்களை செவிமடுக்காது இருக்குமாறும் கட்டளையிடுகிறார்கள். ஏனெனில்; இட்டுக்கட்டப்பட்ட அந்த ஹதீஸ்களை செவிமடுப்பதால் அவை உள்ளத்தில் ஆழப்பதிந்து அதிலிருந்து விடுபடுவது சிரமமாகிவிடும் என்பதினாலாகும்.

فوائد الحديث

நபி (ஸல்) அவர்கள் தமது சமூகத்தில் நடக்கவிருக்கும் ஒரு விடயத்தை எதிர்வுகூறியதும், அவர்கள் அறிவித்தது போன்றே நடந்ததும் நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் பொய்களை இட்டுக்கட்டு பவர்களிடமிருந்து நாம் விலகி இருப்பதுடன், அவர்களின் பொய்களுக்கு ஒரு போதும் செவிசாய்த்தல் கூடாது.

எந்த ஹதீஸ்களையும் அதன் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டதன் பின்னரே தவிர அதனை பரப்புவது மற்றும் ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தல் வேண்டும்.

التصنيفات

சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும், நபிமொழியைப் பதிவு செய்தல், கப்ர் வாழ்க்கை