கப்ர் வாழ்க்கை

கப்ர் வாழ்க்கை

4- 'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்

7- 'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!