தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன்…

தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் அடிப்படை இறைவேதமாகும்

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல்மிக்தாத் இப்னு மஃதீயக்ரிப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் அடிப்படை இறைவேதமாகும்.அதில் அனுமதிக்கப்பட்டவை எவையென்பதை காண்கிறோமோ அதனை அனுமதிப்போம். அதில் எது ஹராம் என்பதாக காண்கிறோமோ அதனை நாம் தவிர்த்து ஹராமானதாகக் கருதுவோம். நபி ஸல்லல்லாஹு அவர்கள் ஹராமாக்கியவை அல்லாஹ் ஹராமாக்கியவை போன்றாகும்.))

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

இந்த ஹதீஸில், ஒரு காலம் வரும்,அவ்வேளை மனிதர்களில் ஒரு பிரிவினர் பஞ்சனையில் அமர்ந்து கொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் விரிப்பில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபியவர்களின் செய்தியை அவர் பெறுவார். அப்போது அவர் உங்களதும் எங்களதும் விவகாரங்களில் தீர்ப்புக் கூற அல்குர்ஆன் ஒன்று மட்டுமே போதும் எனக் கூறுவார். அதில் ஹலால் என இருப்பவற்றை செயலாற்றுவோம், அதில் ஹராம் என்று குறிப்பிடப்பட்டவற்றை விட்டும் தூரமாவோம்; என்று கூறுவோர் பற்றி நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். பின் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தான் அல்லாஹ்விடமிருந்து செய்திகளை எத்திவைப்பவர் என்ற அடிப்படையில், தனது வழிமுறையில் தடுத்தவை மற்றும் தடைசெய்தவை அனைத்தும் சட்டத்தில் அல்லாஹ் தனது வேதத்தில் தடைசெய்த விடயங்களைப்போன்றதே எனத் தெளிவுபடுத்துகிறார்கள்.

فوائد الحديث

அல்குர்ஆனை கண்ணியப்படுத்தி அதனை எடுத்து நடப்பது போன்று, நபிவழியான 'ஸுன்னாவையும்' கண்ணியப்படுத்துதல் அதில் உள்ளவற்றையும் பின்பற்றி ஒழுகுதல்.

இறைதூதருக்குக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகும். அவருக்கு மாறுசெய்வது-முரணாக நடப்பது, என்பது அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாகும்.

அஸ்ஸுன்னா –நபிவழிமுறை- ஆதாரம் என்பதை உறுதிப்படுத்துவதும், ஸுன்னாவை நிராகரித்து மறுப்போறுக்கான மறுப்பாகவும் -பதிலடியாகவும்- இந்த ஹதீஸ் காணப்படுகின்றமை.

யார் ஸுன்னாவை மறுத்து அல்குர்ஆன் மாத்திரம் போதும் என்று விதண்டாவாதம் புரிகிறாரோ அவர் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் புறக்கணித்தவராவர். மேலும் அல்குர்ஆனை பின்பற்றுவதாக அவர் கூறும் விடயத்திலும் அவர் பொய்யராக உள்ளார் என்பதே உண்மையாகும்.

எதிர்காலத்தில் நடக்க இருப்பவைபற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அறிவிப்பானது –எதிர்வு- கூறலானது, நபியவர்களின் நபித்துவத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களில் ஒன்றாகும். அத்துடன் நபியவர்கள் கூறியவை –எதிர்காலத்தில் நடந்தேதீரும் என்பது உண்மையாகும்.

التصنيفات

சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும், இறைத்தூது, கப்ர் வாழ்க்கை