இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை…

இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு

இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான ஈத்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளுக்குப் பக்கமாக சென்றபோது அவர்கள்: இந்த இரண்டு கப்ருகளிலும் அடக்கம் செய்யப்பட்வர்கள் உண்மையில் வேதனை செய்யப்படுகிறார்கள், அவர்கள் இருவருக்கமான வேதனை உங்களின் பார்வையில் மிகப்பெரிய விடயத்திற்காக அல்ல என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமாகும். அவ்விருவரில் ஒருவர் இயற்கைத்தேவையை –சிறுநீர் கழிக்கையில் அச்சிறுநீர் தனது உடல் மற்றும் ஆடையில் படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதை பொருட்படுத்தாது இருந்தவர். மற்றொருவர், மக்களுக்கு மத்தியில் புறம் பேசித் திரிபவர். அதாவது, முரண்பாட்டையும் பிரச்சினையையும் மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பிறரின் பேச்சை பரப்பித் திரிபவர்.

فوائد الحديث

புறம் பேசுவதும், சிறுநீர் கழித்துவிட்டு முறையாக சுத்தம் செய்யாது இருத்தலும் மிகப்பெரும் பாவங்களில் ஒன்றாகவும், கப்ரில் வேதனை செய்யப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.

கப்ருடைய வேதனை போன்ற மறைவான சில விடயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நுபுவத்திற்கு சான்றாக அல்லாஹ் வெளிக்காட்டுகிறான்.

ஈத்தம் மட்டையை பிளந்து அதனை அந்த கப்ருகளின் மீது நட்டிய செயலானது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கே உரிய பிரத்தியேகமான விடயமாகும். காரணம் கப்ரில் குறித்த இரு தோழர்களின் நிலமையை அல்லாஹ் நபியவர்களுக்கு அறியச்செய்தான். இந்த செயலை மற்றவர்கள் ஒப்பிட்டு செய்வது கூடாது. காரணம் அவர்களைப் பொறுத்தவரை கப்ரில் இருப்போரின் நிலை அவர்களுக்கு தெரியாது.

التصنيفات

கப்ர் வாழ்க்கை, தீய குணங்கள், கப்ரின் அமளிதுமளிகள்