'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல்,…

'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடமிருந்து கேட்ட ஒரு ஹதீஸை உங்களுக்கு அறிவிக்கிறேன், என்னைத் தவிர யாரும் அதை உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் கூற நான் செவியுற்றேன் : 'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கியாம நாள் நெருங்கும் போது நிகழும் சில அடையாளங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார்கள். அறிஞர்களின் மரணம் காரணமாக ஷரீஆ பற்றிய அறிவு உயர்த்தப்படுவது அதில் ஒன்றாகும். இதன் விளைவாக அறியாமை மேலோங்கி எல்லா இடத்திலும் அறியாமை பரவிவிடும்.விபச்சாரமும் மானக்கேடான விடயங்களும் சர்வசாதாரணமாக பரவும். மது அதுருந்துதல் அதிகரித்துவிடும். ஒரு ஆண் ஜம்பது பெண்களின் விவகாரங்களை நிர்வகித்து அவர்களின் நலன்களை பொருப்பேற்று நடாத்தும் அளவுக்கு, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.

فوائد الحديث

மறுமை நாளின் சில அடையாளங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை.

மறுமை நாள் பற்றிய அறிவு மறைவான விடயங்களில் ஒன்றாகும் அது குறித்த விசேடமாக அறிவை அல்லாஹ் மாத்திரமே பெற்றுள்ளான்.

ஷரீஆ கல்வி அறிஞர்களின் மரணங்களால் இழக்கப்படுவதற்கு முன் அதனை கற்றுக்கொள்ள தூண்டியிருத்தல்.

التصنيفات

கப்ர் வாழ்க்கை, அறிவின் மகிமை