'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் நிகழாது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே! இதோ எனக்குப்…

'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் நிகழாது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான் என்று கற் பாறைகள் அழைத்து அவனை கொள்ளுமாறு கூறும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ம் அவர்கள் கூறியதாக அபூ ஹுறைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் நிகழாது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான் என்று கற் பாறைகள் அழைத்து அவனை கொள்ளுமாறு கூறும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

யூதர்களுடன் முஸ்லிம்கள் போராடும்வரையில் மறுமை நாள் தோன்றாது என நபியர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். 'முஸ்லிம்கள் யூதர்களுடன் போராடும் போது முஸ்லிம்கள் பார்த்து விடாமல் யூதரகள்; விரண்டோடி கற்பாறைகளுக்கு பின்னால் மறைந்து கொள்வார்கள், அவ்வேளை அல்லாஹ் கற்பாறையை பேசவைப்பான்.அவை முஸ்லிமிடம் தனக்குப்பின்னால் யூதனொருவன் மறைந்துள்ளான் அவனைக் கொலைசெய்ய வாரீர் என அழைப்பு விடுக்கும்.'

فوائد الحديث

அல்லாஹ் அறிவித்ததற்கிணங்க நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைவான மற்றும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருத்தல். ஆக அல்லாஹ் அறிவித்ததற்கினங்க அவை உண்மையில் எவ்வித சந்தேகமுமின்றி நடைபெறும்.

இறுதி காலத்தில் யூதர்களுடன் முஸ்லிம்கள் போராடுதல் மறுமை நாளுக்கான அடையாளங்களில் ஒன்றாகும்.

அனைத்து மதங்களை வெற்றி கொண்டு,மறுமை நாள் வரையில் இஸ்லாம் நிலைத்திருக்கின்றமை.

முஸ்லிம்களின் பகைவருக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி கிடைக்கின்றமை. அதில் ஒர் அங்கமாக இறுதி காலத்தில் சடப்பொருளான கற்பாரை பேசுவதும் உள்ளது.

التصنيفات

கப்ர் வாழ்க்கை