ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்)…

ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மண்ணறையை கடந்து செல்கையில் தான் அவன் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டுமே என்று நினைக்கும் வரையில் மறுமை ஏற்பட மாட்டாது. அசத்தியமும் அசத்திய வாதிகளும் மிகைத்ததின் விளைவாக மரர்க்கம் தன்னை விட்டு சென்றுவிடும் என்ற பயமும், குழப்பங்கள் பாவகாரியங்கள் மானக்கேடான விடயங்கள் அதிகரித்து மிகைத்திருப்பதுமே இவ்வாறு நினைப்பதற்கு காரணம் என குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

இறுதிக்காலத்தில் பாவங்களும் குழப்பங்களும் பகிரங்கமாக காணப்படும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டியிருத்தல்.

இவ்வாறான விடயங்களில் எச்சரிக்கையாக இருக்கும் படி வலியுறுத்தியிருத்தல். அத்துடன் ஈமான், நல்ல காரியங்களின் மூலம் மரணத்திற்குத் தயாராகுதல், குழப்பங்கள் சோதனைகள் உள்ள இடத்தை விட்டும் விலகியிருத்தல்.

التصنيفات

கப்ர் வாழ்க்கை, நல்லோர்களின் நிலைகள், உளப்பரிசுத்தம் செய்தல்