'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்)…

'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மக்களுக்கு மத்தியில் நீதி மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஆ சட்டதிட்டங்களின் மூலம் ஆட்சி புரிவதற்கென ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானிலிருந்து இறங்கும் காலம் நெருங்கிவிட்டது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சத்தியமிட்டு குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு இறங்கிய வேளை, கிறிஸ்தவர்கள் புனிதப்படுத்தும் சிலுவையை உடைத்திடுவார். பன்றியைக் கொல்வார். மேலும் அவர்கள் மக்களின் வரியை நீக்கி விட்டு அவர்கள் அனைவரையும் இஸ்லாத்தினுள் நுழையுமாறு தூண்டுவார். செல்வம் பெருகி அதனை பெற்றுக்கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள். காரணம் செல்வம் ஒவ்வொருவரிடமும் அதிகமாக காணப்படுவதாலும் பரக்கத் மற்றும் நன்மையும் தொடர்ந்தும் இறங்குவதினாலும் அவர்கள் தன்னிடமுள்ளவற்றைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வர்.

فوائد الحديث

இறுதிக்காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவது உறுதிப்படுத்தல் மேலும் அவரின் வருகை மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கத்தை வேறு மார்க்கங்கள் மாற்ற மாட்டாது.

இறுதிக்காலத்தில் செல்வத்தில்; அல்லாஹ்வின் பரக்கத் இறங்கி அபிவிருத்தி காணப்படும் மக்களும் அதில் பற்றற்று இருப்பர்.

இறுதிக்காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆட்சி புரியும் அளவிற்கு இஸ்லாமிய மார்க்கம் நிலைத்திருக்கும் என்ற சுப செய்தியை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளமை.

التصنيفات

முன்சென்ற இறைத்தூதர்கள், நம் தூதர் முஹம்மத் (ஸல்), கப்ர் வாழ்க்கை, இஸ்லாமிய மார்க்கத்தின் பொதுமை