'ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன்…

'ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர்

பராஉ இப்னுல் ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் : 'ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதுதான், (இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான் ' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இறை விசுவாசி (முஃமின்); கப்ரில் விசாரிக்கப்படுவார். கப்ரில் -மண்ணறையில்- விசாரிக்கப்படுவதற்கென பொறுப்புச் சாட்டப்பட்ட முன்கர் நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் விசாரணை நடத்துவர். அவர்கள் இருவரினதும் பெயர்கள் பல ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. அப்போது அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை. முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதனையே அல்லாஹ் அல் கவ்லுஸ் ஸாபித் (உறுதியான வார்த்தை) என பின்வரும் வசனத்தில் கூறிப்பிடுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அந்த வசனம் : "(இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான்'' (இப்ராஹீம்: 27)

فوائد الحديث

மண்ணறை விசாரணை உண்மையாகும்.

உறுதியான வார்த்தையின் மூலம் இம்மை மறுமையில் நிலைபெறச்செய்வதன் ஊடாக தனது அடியார்களான முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும்; அருட்கொடை குறிப்பிடப்பட்டுள்ளமை.

தவ்ஹீதை -ஏகத்துவத்தை- ஏற்று சாட்சியமளிப்பதும் அதன் மீது மரணிப்பதன் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ளமை.

உறுதியான வார்த்தையின் மூலம் நிலை பெறச்செய்தல் என்பது அல்லாஹ் முஃமின்களுக்கு இவ்வுலகில் ஈமானிலும்; நேரான பாதையில் செல்வதிலும்; ஸ்திரத்தன்மையை அளித்து நிலைபெறச் செய்கின்றமை. மேலும் மரண வேளையில் ஏகத்துவத்தில் மரணிக்கச் செய்வதிலும், கப்ரில் வானவர்களின் கேள்விகளுக்கு உறுதியாக பதிலளிப்பதற்கான உறுதியையும் வழங்குகின்றமை என்ற கருத்தைக் குறிக்கும்.

التصنيفات

கப்ர் வாழ்க்கை