('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட…

('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது.அதன் மணம் கஸ்தூரியை

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்: ('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது.அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது.அதன் கூசாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மறுமை நாளில் நபியவர்களுக்கென ஒரு தடாகம் உள்ளதாகவும் அதன் நீளமும் அகலமும் ஒரு மாதகால பிரயாணம் செய்யும் தூரத்துக்கு நிகரானது என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் அதன் நீரானது பாலைவிட வெண்மையானது. அதன் சுகந்தமோ கஸ்தூரியை விட அதிகமானது. அதில் வைக்கப்ப்ட்டுள்ள கூசாக்களின் எண்ணிக்கை வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் அளவுக்கு மிக அதிகமானவை . இந்த தடகத்தில் அந்த கூசாக்களின் மூலம் நீர் அருந்தியோருக்கு தாகமென்பது ஒரு போதும் ஏற்படாது.

فوائد الحديث

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தடாகம் மிகப்பிரமாண்டமனா ஒரு நீர் நிலையாகும். அதில் நீர் அருந்துவதற்காக அவர்களின் சமூகத்தவர்களான முஃமின்கள் மறுமை நாளில் செல்வார்கள்.

இந்தத்தடாகத்திலிருந்து நீர் அருந்தும் வாய்ப்பைப் பெற்றோர் தாகமே ஏற்படாத நிலையான சுவர்க்க இன்பத்தை அடைந்து கொள்வர்.

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்