அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது…

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை'. எனினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உமர் (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

பாலை வனத்தில் வசிக்கும் ஒரு நாட்டுப்புற அரபி நபியவர்களிடம் வந்து மறுமை நாள் நிகழும் நேரம் குறித்து வினவினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம் நீ அதற்காக நல்லமல்களில் எவற்றை தயார்செய்து வைத்துள்ளாய்? என்று கேட்டார்கள். கேள்வி கேட்டவர் நான் அதற்கென பெரிதாக எந்தவொரு நற்காரியத்தையும் செய்யவில்லை என்றாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உளமாற தான் நேசிப்பதாக கூறினார். இது தவிர உளரீதியான, உடல் ரீதியான மற்றும் செல்வ ரீதியான எந்த ஒரு வணக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை. ஏனெனில் இவையெல்லாம் அடிப்படையான நேசத்தின் விளைவாக வருபவை. அத்துடன் உண்மையான நேசமானது நல்லமல்களின் பால் முயற்சிப்பதை தூண்டக் கூடியதாக இருக்கும். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் சுவர்க்கத்தில் இருப்பாய் என்று கூறினார்கள். இந்த நன்மாரயத்தின் (நற்செய்தி) மூலம் ஸஹாபாக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். தொடர்ந்தும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகையில், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் அபூபக்ர் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரையும் நேசிக்கிறேன். தனது அமல்கள் அவர்களின் அமல்களின் அளவுக்கு இல்லையென்றிருந்தாலும் அவர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்றார்கள்.

فوائد الحديث

கேள்வி கேட்டவருக்கு பதிலளிப்பதில் நபியவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டமை. அதாவது கேள்வி கேட்டவருக்கு நரகிலிருந்து அவருக்கு மீட்சியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய விடயத்தின் பால் அவருக்கு வழிகாட்டினார்கள். அதுதான் நன்மையான காரியங்கள் மற்றும் நற்செயல்கள் மூலம் மறுமைக்கு தயாருகுதல்.

அல்லாஹ்வை சந்திப்பதற்கு எப்போதும் மனிதன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக, அடியார்களுக்கு அல்லாஹ் மறுமை நிகழும் நேரத்தைப் பற்றிய அறிவை மறைத்து வைத்துள்ளான்.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களில் நல்லோர்களையும் நேசிப்பதன் சிறப்பு பிரஸ்தாபிக்க்பட்டிருத்தல்.

'நீ யாரை நேசிக்கிராயோ அவருடன் நீர் சுவர்கத்தில் இருப்பீர்' என்ற நபியவர்களின் கூற்றின் கருத்து படித்தரம் மற்றும் அந்தஸ்தில் சரிநிகராக இருப்பீர் என்ற பொருளல்ல. மாறாக அவர்கள் எல்லோரும் சுவர்கத்தில் இருப்பார்கள் ஒவ்வொருவரும் தாம் இருக்குமிடம் தூரமாக இருப்பினும் மற்றவரை காணுமளவிற்கு முடியுமாக இருக்கும்.

ஒரு முஸ்லிம் தனக்கு மிகவும் சிறந்ததும் பயனைப் பெற்றுத் தரவல்லதுமான விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தனக்கு எவ்விதத்திலும் பயனற்ற விடயங்களில் கேள்வி கேட்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டுள்ளமை.

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், உளச் செயற்பாடுகள்