உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம்…

உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாட்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு காலம் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் ( விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாதிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) மேலும் உங்களில் ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் சொர்க்கவாதிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இப்னு மஸ்ஊத் கூறினார்கள் : தனது வார்த்தையில் உண்மை பேசியவரும், அல்லாஹ் உண்மைப்படுத்தியவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எங்களுக்கு அறிவித்தார்கள்: உங்கள் ஒருவரின் படைப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதர் தனது மனைவியிடம் உறவு கொண்டால் அவனின் சிதரிய விந்தானது நாற்பது நாட்கள்; வயிற்றில்-விந்தாகவே கருவறையில்- ஒன்றிணைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்களில் இரத்தக்கட்டியாக மாறிவிடுகிறது.(இரண்டாம் நாட்பதுகளில்) அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்களில் மென்று சாப்பிடும் நிலையிலுள்ள சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது.( (மூன்றாம் நாற்பது நாற்களில்) அதன் பிறகு 120 நாட்கள் முடிவடைந்ததும் மலக்கு அனுப்பப்பட்டு அவருக்கு உயிர் ஊதப்படுகிறது. பின்னர் அவர் குறித்த நான்கு வார்த்தைகளை எழுதுமாறு கட்டளையிடப்படுவார். முதலாவது அவனின் வாழ்வாதாரம் குறித்ததாகும் அதாவது அவனின் ஆயுளில் அவன் பெற்றுக்கொள்ளும் இன்பங்களின் அளவாகும். அஜல் என்பது உலகில் அவர் தங்கியிருக்கும் காலத்தைக் குறிக்கும். அவனின் அமல் செயற்பாடு என்பது என்ன? அவன் ஒரு பாக்கியசாலியா? அல்லது துர்ப்பாக்கியசாலியா? பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆணையிட்டு கூறினார்கள்: ஒருவர் சுவர்க்கவாதிகளின் செயலில் ஈடுபடுவார். மனிதர்களுக்கு வெளிப்படையில் அவரின் செயல் நற்செயலாக இருக்கும். பூமியில் ஓரிடத்தில் ஒருவருக்கு குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கான தூரம் ஒரு முழம் அளவு இருப்பது போன்று அவர் சுவர்க்ததிற்குள் நுழைய ஒரு முழம் அளவு இடைவெளி காணப்படும். அந்நேரம் அவரின் விதி அவரை முந்தி அவர் நரகவாதிகளுக்குரிய செயலொன்றை செய்து விடுவார் இவ்வாறான ஒரு செயலின் மூலம் அவரின் ஆயுல் முடிவடைந்து விடும்.இதன்காரணமாக அவர் நரகம் நுழைவார். ஒருவர் தனது செயலில் மாறாது மிக உறுதியாக இருப்பது அவரின் செயல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையாகும். இன்னொரு மனிதரைப்பொருத்தவரை அவரும் நரகை அண்மிக்கும் வரையில் நரகவாதிகளின் செயலை செய்து கொண்டிருப்பார். நரகத்திற்கும் அவருக்குமிடையில் நிலத்தில் ஒரு முழம் அளவான தூரம் காணப்படும் அவ்வேளை அவரின் விதி முந்தி சுவர்க்கவாதிகளின் ஒருவரின் நற்செயலை செய்வதன் மூலம் சுவர்க்கம் நுழைந்திடுவார்.

فوائد الحديث

இறைவிதியின் ஏற்பாட்டின் அடிப்படையிலேயே எல்லா விவகாரங்களின் முடிவும் காணப்படுகின்றமை.

செயல்களின் வெளித் தோற்றத்தில் கவர்ச்சி -பிறமை- கொள்வதை விட்டும் எச்சரிக்கப்பட்டிருத்தல்.காரணம் செயற்பாடுகள் யாவும் இறுதி வெளிப்பாடுகள் மூலமே தீர்மானிக்கப்படுகிறன.

التصنيفات

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், வானவர்கள், விதியின் படித்தரங்கள், இஸ்லாம்