إعدادات العرض
“இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு…
“இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வைப்பான்
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் , (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றுள்ளீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : “இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வைப்பான். (அவரிடத்தில் இறைவன்), “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா” என்(று கேட்)பான். அவர், “(ஆம்) அறிவேன். என் இறைவா!” என்று கூறுவார். அப்போது இறைவன், “இவற்றை யெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்காக அவற்றை மன்னித்து விடுகின்றேன்” என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட் டப்படும். நயவஞ்சகர்களும் இறைமறுப்பாளர்களும் சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர்கள்தான், தம் இறைவன்மீது பொய் யைப் புனைந்துரைத்தவர்கள்” என அறிவிக்கப்படும்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Français Tiếng Việt Hausa Kurdî Kiswahili Português සිංහල Русский Nederlands অসমীয়া ગુજરાતી پښتو മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română Українська ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Српски Malagasy Kinyarwanda Shqipالشرح
நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் தனது அடியானுடன் மறுமையில் இரகசியமாகப் பேசுவது பற்றி இவ்வாறு கூறினார்கள்: மறுமையில் ஒரு விசுவாசி தனது ரப்புக்கு நெருக்கமாக அழைக்கப்படுவான். அவ்விசுவாசியின் இரகசியத்தை ஏனையோர் அறியாமல் இருக்க, அல்லாஹ் ஏனையோரை விட்டும் அவனை மறைத்துப் பின்வருமாறு கூறுவான்: இன்ன இன்ன பாவங்கள் நினைவில் உள்ளதா? என்று கேட்டு, இவ்வாறே, தனக்கும் அவ்வடியானுக்கும் மத்தியில் உள்ள எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான். அவன், 'ஆம் ரப்பே!" என்று கூறுவான். அப்போது விசுவாசி திடுக்கிட்டுப் பயந்தவுடன், அல்லாஹ், 'இவ்வுலகில் இவற்றை நான் மறைத்திருந்தேன்; இன்று நான் அவற்றை மன்னித்து விடுகின்றேன்’ என்று கூறுவான். அச்சமயம் அவனது நன்மைகள் ஏடு அவனிடம் வழங்கப்படும். நயவஞ்சகர்களும் இறைமறுப்பாளர்களும் சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர்கள்தான், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என அறிவிக்கப்படும்فوائد الحديث
முஃமின்களின் குறைகளை இம்மையிலும், மறுமையிலும் மறைத்து அவர்களுக்கு பேருபகாரமும், கருணையும் புரிந்துள்ளமை.
இயன்றவரை ஒரு முஃமினின் குறைகளை மறைக்க ஆர்வமூட்டல்.
அடியார்களின் எல்லா செயற்களையும் அல்லாஹ் கணக்கிட்டு வைப்பான். நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். வேறு ஏதாவதொன்றைப் பெற்றவர், தன்னைத் தானே நொந்து கொள்ளட்டும். அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் உள்ளார்.
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகின்றார்கள்: பல்வேறு ஹதீஸ்கள், பாவிகளாக இருந்த முஃமின்கள் இரு பிரிவினராக இருப்பர் என அறிவிக்கின்றன: முதல் தரப்பினரின் பாவங்கள் அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடைப்பட்டது. இவர்கள் இரு தரப்பினராக இருப்பர் என்பதை இப்னு உமர் (ரலி) அவர்களது ஹதீஸ் அறிவிக்கின்றது. ஒரு தரப்பினரின் பாவங்கள் உலகில் மறைக்கப் பட்டிருக்கும். இவர்களை அல்லாஹ் மறுமையிலும் மறைப்பான். இது ஹதீஸில் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. மற்ற தரப்பினர் பகிரங்கமாகப் பாவம் செய்திருப்பர். மறுமையில் முதல் தரப்பினருக்கு நேர்மாற்றமான நிகழ்வு இவர்களுக்கு நடக்கும் என்பதை ஹதீஸ் மறைமுகமாக உணர்த்துகின்றது. இரண்டாம் தரப்பினரின் பாவங்கள் அவர்களுக்கும் அடியார்களுக்கும் மத்தியிலானது. இவர்களும் இரு பிரிவினராகும். ஒரு பிரிவினரின் நன்மைகளை விடப் பாவங்கள் அதிகரித்திருக்கும். இவர்கள் நரகில் நுழைந்து, பரிந்துரை மூலம் வெளியேறுவார்கள். மற்ற தரப்பினரின் நன்மைகளும், பாவங்களும் சரிசமமாக இருக்கும். இவர்களிடம் பழிவாங்கல் நிகழும் வரை இவர்கள் சுவனம் நுழையமாட்டார்கள்.
التصنيفات
இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்