சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில்,அல்லாஹ் அவனிடம் உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென…

சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில்,அல்லாஹ் அவனிடம் உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான்.அவன் விரும்பிய பின்,அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா?என்று கேட்பான்.அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.

சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில்,அல்லாஹ் அவனிடம் உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான்.அவன் விரும்பிய பின்,அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா?என்று கேட்பான்.அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஹதீஸ் விளக்கம்:சுவர்க்க வாசிகளில் குறைந்த இடமும் அந்தஸ்தும் உடையவர் யாரெனில்,தான் விரும்பிய இடத்தின் அளவில் எந்தக் குறைவுமில்லாமல் அதனை அடைந்து கொள்வதாகும்.அதாவது அல்லாஹ் அவனிடம் கூறிய பிரகாரம் அவன் தான் விரும்பிய அளவு நினைத்துப் பார்ப்பான்.அவன் அப்படி நினைத்து முடிந்ததும்,அவனிடம் அல்லாஹ் நீ நினைத்ததும் இன்னும் அது போன்று இன்னொரு அளவு அதிகமானதும் உனக்குரியதுதான்.என்று கூறுவான்.இது அல்லாஹ் அவனுக்குத் தரும் மேலதிகக் கொடையும்,கண்ணியமுமாகும்.

التصنيفات

மறுமை வாழ்வு, சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்