எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப…

எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் இருப்பது உண்மைதான் எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஏகத்துவ வார்த்தையை மொழிந்து அதன் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் அமல் செய்து, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடிமையென்றும், அவரின் தூதுத்துவத்தை சான்று பகர்ந்து, ஈஸா (அலை) அவர்களையும் அவரின் தூதுத்துவத்தையும் ஏற்று, மேலும் அல்லாஹ் அவரை 'குன்'ஆகுக என்ற வார்த்தையின் மூலம் படைத்தான் என்றும் அவர் அல்லாஹ் படைத்த உயிர்களில் ஒன்று என ஏற்று, யூதர்கள் அவர்களின் தயார் குறித்து கூறிய தரங்கெட்ட வார்த்தையை விட்டும் அவர்களின் தாயார் தூய்மையானவர் என தூய்மைப்படுத்தி, சுவர்க்கம் மற்றும் நரகம் உண்மையானவை என விசுவாசித்து, அவைகளின் உள்ளமையை ஏற்றுக் கொண்டு அவை இரண்டும் அல்லாஹ்வின் வெகுமதியும் அவனின் தண்டனையும் என முழுமையாக நம்பி, அந்த நம்பிக்கையின் மீதே மரணித்துவிட்டால் அவர் செல்லுமிடம் சுவர்க்கமாகும். அவர் வணக்க வழிபாடுகளில் குறைவு செய்து, பாவங்கள் செய்திருந்தாலும் சரியே!

فوائد الحديث

மர்யமின் மகன் ஈஸாவை அல்லாஹ் 'குன்' எனும் வார்த்தையின் மூலம் தந்தையின்றி படைத்தான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆகிய இருவரையும் ஒன்றிணைப்பது – அல்லது அவர்கள் இருவர்களுக்கிடையேயான ஒற்றுமை அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதர்களுமாவர் என்பதாகும். மேலும் அவர்கள் இருவரும் தூதர்கள் என்பதில் பொய்பிக்கப்படவோ, வணங்கப்பட வேண்டியவர்களோ அல்லர்.

தவ்ஹீத்-ஏகத்துவத்தின்- சிறப்பும் அதன் விளைவாக பாவங்கள் மன்னிக்கப்டுதலும், மேலும் ஓரு ஏகத்துவவாதியின் இறுதி முடிவு அவனிடமிருந்து சில பாவங்கள் நிகழ்ந்தாலும் கூட சுவர்க்கமாகும்.

التصنيفات

வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்., இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல், சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்