வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்.

வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்.

3- 'உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான்

10- அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு தீமையையே அல்லாஹ் எழுதுகிறான்

15- 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் (மண்ணறையையும்) தரையுடன் சமப்படுத்தாது விட்டு விடாதீர்!' என்று கூறினார்கள்

19- 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது'

27- அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ' அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை மாத்திரமே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்'

35- அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை' என்று கூறினார்கள்

37- உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்